எல்லா படங்களும் விரும்பி நடிக்கல…ரகசியத்தை உடைத்த நடிகை ரேவதி.!
Author: Selvan20 March 2025, 9:53 pm
தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் 80களிலும் 90களிலும் முன்னணி நடிகையாக ரசிகர்களின் மனதை கைப்பற்றியவர் நடிகை ரேவதி.தனது தனித்துவமான நடிப்பால் கவனம் ஈர்த்த அவர்,பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தன்னை வெளிப்படுத்தி பெரும் பாராட்டுகளை பெற்றார்.
இதையும் படியுங்க: தயவு செஞ்சு இந்த ஒரு பழக்கத்தை பழகாதீங்க…ஹரிஷ் ஜெயராஜ் வேண்டுகோள்.!
2022ஆம் ஆண்டு,பாலிவுட் நடிகை கஜோல் நடிப்பில் வெளிவந்த சலாம் வெங்கி திரைப்படத்தை இயக்கி இயக்குனராகவும் அடியெடுத்து வைத்தார் ரேவதி,தற்போது ஒரு வெப் தொடர் இயக்கி வருகிறார்.
சமீபத்தில்,தனது திரையுலக வாழ்க்கை குறித்து பேசிய அவர்,”நான் இதுவரை நடித்த அனைத்து படங்களும் எனக்கு விருப்பமானவை அல்ல,சில படங்களில் விருப்பமில்லாமலே நடித்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியது,இருப்பினும்,சினிமாவை வெறும் பணம் சம்பாதிக்கும் ஒரு வழியாக மட்டும் நான் பார்த்தது இல்லை,அது எனக்கு மிகவும் பிரியமானது” என கூறியுள்ளார்.
அவருடைய இந்த கருத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினரிடையே கவனம் பெற்று வருகிறது.