பாரதிராஜா கைவைக்காத நடிகைகளே கிடையாது.. அட பாவமே.. 16 வயதில் இந்த நடிகைக்கு இப்படி நடந்துச்சா..! பிரபல நடிகை சொன்ன பகீர் தகவல்..!

Author: Vignesh
10 November 2022, 12:00 pm

தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் இயக்குனர் பாரதிராஜா. முதல் படமே பெரியளவில் வரவேற்பு பெற்று அடுத்தடுத்த ஆண்டுகளில் வெற்றிப்படங்களை இயக்கி வெளியிட்டு வந்தார்.

அவர் இயக்கிய படங்களில் நடித்த நடிகர், நடிகைகள் தற்போது தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் பிரபலங்களாக இருந்து வருகிறார்கள். அப்படி பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட புது முகங்களில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ரேவதி. மண் வாசனை படத்தில் பாண்டியனுக்கு ஜோடியாக நடித்து நடிகையாக அறிமுகமாகினார் ரேவதி.

Revathi - updatenews360

அப்படம் கொடுத்த வரவேற்பால அடுத்தடுத்த படங்களில் 80களில் கொடிக்கட்டி பறந்தார். பாரதிராஜா என்றாலே தன் படத்தில் நடிக்கும் கலைஞர்களிடம் இருந்து நடிப்பு வரவேண்டி கன்னத்தில் பளார்விடவும் தயங்கமாட்டார். அப்படி அவர் கை வைத்து அடிக்காமல் உயர்ந்த நட்சத்திரங்களே கிடையாது.

bharathiraja - updatenews360

இதுகுறித்து சித்ரா லட்சுமணன் அவர்களின் பேட்டியில் பகிர்ந்துள்ளார் ரேவதி. பாரதிராஜா அடிக்காமல் நடித்து முடித்த நடிகைகளே கிடையாது. நீங்கள் எந்த கட்டத்தில் அடிவாங்கினீர்கள் என்று கேட்டுள்ளார் சித்ரா லட்சுமணன்.

அதற்கு ரேவதி, ஒரே ஒரு அடி மண்வாசனை படத்தின் கிளைமேக்ஸ் தான். அந்த காட்சியில் கத்திபேச வேண்டும் அதற்காக கன்னத்தில் பளாரென்று அடித்தார். 16 வயதில் அப்படி அடித்தது தான் மறக்கமுடியாது. ஆனால் அது அடிக்கிடையாது. என்னை என்கரேஜ் செய்ய அடித்தது போல் தான் அந்த அடி இருந்தது என்று கூறியுள்ளார்.

Revathi - updatenews360

பாரதி ராஜாவுக்கு முன் என்னை பளார் விட்டது நடிகர் பாண்டியன் தான். பல படங்களில் அவருடன் நடித்திருக்கிறேன். அப்படி காட்சிக்காக அவர் என்னை அடித்தது காதில் சத்தம் தான் வந்தது என்று கூறியுள்ளார்.

அதற்கு காரணம் பாரதிராஜா பாண்டியன் கன்னத்தில் அடித்தார். அந்த கோபத்தில் தான் என்னை அடித்தார் பாண்டியன் என்று விளக்கமளித்துள்ளார் நடிகர் ரேவதி.

  • GBU movie audience reaction எரிச்சல் ஆகுது, படம் முழுவதும் Instagram Reelsதான்- GBU பார்த்து கொந்தளித்த ரசிகர்கள்…