அந்த விஷயத்தில் உச்ச நடிகருடன் போட்டிப்போட்ட ரேவதி.. – உசுப்பேத்திய பிரபல நடிகரின் வாரிசு..!

Author: Vignesh
1 July 2023, 10:30 am

1986-ம் ஆண்டு உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பால் வெளியான திரைப்படம் புன்னகை மன்னன். இப்படத்தை இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கியிருந்தார்.
இதில் ரேவதி, ரேகா ஆகியோர் நடித்திருந்தனர்.

punnagai mannan - updatenews360

புன்னகை மன்னன் திரைப்படத்தை இந்த காலகட்டத்திலும் பலராலும் ரசிக்க படுகிறது. இந்த படத்தில் ஒரு நடன கலைஞர் வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்களும், கஷ்டத்தை குறித்து மிகவும் அழகாக கூறியிருப்பார்கள்.

punnagai mannan - updatenews360

புன்னகை மன்னன் படத்தில் கமலும், ரேவதியும் சேர்ந்து நடனமாடும் காட்சியை எடுத்து கொண்டிருக்கும் போது, கமலின் நடனத்திற்கு ரேவதியால் ஈடு கொடுக்க முடியவில்லையாம்.

punnagai mannan - updatenews360

இந்த பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்த கலா மாஸ்டரிடம், என்னால் கண்டிப்பாக கமலுக்கு ஈடு கொடுத்து நடனமாட முடியாது என்று சொல்லி அழுது விட்டாராம். அதன் பின்னர் அவரை சமாதானம் படுத்தி எல்லோரும் நடனமாட வைத்தார்களாம். இந்நிலையில், சித்ரா லட்சுமணன் யூட்யூப் சேனலுக்கு ரேவதி பேட்டி கொடுத்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

revathi-updatenews360

ரகு மாஸ்டரிடம் கலா, பிருந்தா வேலை பார்த்தார்கள். புன்னகை மன்னன் படத்தில் பிருந்தா தான் தனக்கு கற்றுக் கொடுத்தார் எனவும், அப்போது நடனத்தில் கமல்ஹாசனை விடவும் அவருக்கு சமமாக டான்ஸ் ஆடணும் என்று பிரிந்தாவிடம் கூறி மூன்று நாட்களுக்கு முன்பே ரிகர்சல் பண்ணியதாகவும், இதை கேள்விப்பட்டு ரேவதி ரிகர்சல் பண்றாளா? என்று நானும் வரேன்னு சொல்லி மூணாவது நாளிலேயே வந்துட்டார் என்று கூறியிருக்கிறார்.

இயக்குனர்கள் கூறும் விஷத்தை அவர்களுக்கு குறை வைக்காமல் நடிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்ததாகவும் நடிகை ரேவதி தெரிவித்துள்ளார்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 623

    0

    0