நானும் அவரும் தெரு தெருவா அலைஞ்சோம்.. ஒன்னும் வேலைக்கு ஆகல.. வருத்தப்பட்ட ரேவதி..!
Author: Vignesh1 ஜூலை 2023, 3:30 மணி
தமிழ் சினிமாவில் புதிதான வேறு மாதிரியான கதைகளை சொல்லிக் கொடுத்தவர்தான் மணிரத்தினம். முதலில் இவர் கன்னடத்தில் பல்லவி அனு பல்லவி என்கிற படத்தை இயக்கினார். இவர் யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் சுயமாக சினிமாவை கற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் பக்கம் பக்கமாக வசனம் பேசிய சினிமாவை மாற்றி வசனத்தை குறைத்து காட்சி வழி கதை சொன்னவர் தான் மணிரத்தினம். அதனால் தான் இப்போதும் சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் பல இளைஞர்களுக்கு மணிரத்தினம் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.
மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த மௌன ராகம், ரோஜா, பம்பாய், தளபதி, இருவர், அக்னி நட்சத்திரம், நாயகன், அஞ்சலி ஆகிய படங்கள் பற்றி இப்போதும் பேசுகிறார்கள் ஏனெனில் அதற்கு ஒரே காரணம் மணிரத்தினம் தான். இப்போதும் கூட பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து பெரிய ஹிட்டை கொடுத்துள்ளார் மணிரத்தினம்.
இந்நிலையில், மணிரத்தினம் இயக்கத்தில் பகல் நிலவு, மௌனராகம், அஞ்சலி ஆகிய மூன்று படங்களில் நடித்தவர்தான் நடிகை ரேவதி. இவர் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அப்போது மணிரத்தினின் மேக்கிங் ஸ்டைல் தனக்கு பிடித்துப் போனதாகவும், மணிரத்தினம் அப்போதுதான் மௌனராகம் பட கதையை தன்னிடம் சொன்னதாகவும் தன்னிடம் ஆங்கிலத்தில் முழு கதையும் சொன்ன ஒரே இயக்குனர் மணிரத்தினம் தான் என்று பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
மேலும், மௌன ராகம் கதையை நீங்கள் படமாக எடுத்தால் நான் நடிப்பேன் என அவரிடமே கூறியதாகவும், அந்த படத்தை தாங்கள் துவங்கிய போது எந்த தயாரிப்பாளரும் அந்த படத்தை எடுக்க முன்வரவில்லை என்றும், தானே சில தயாரிப்பாளர்களிடம் நேராக சென்று பேசியதாகவும், ஆனால் யாருக்கும் அந்த கதையின் மீது நம்பிக்கை வரவில்லை எனவும், இறுதியாக மணிரத்தினத்தின் சகோதரர் ஜிவி அந்த படத்தை தயாரிக்க முன்வந்தார் என ரேவதி பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
0
0