அஜித் வீட்டு மருமகளாகும் யாஷிகா … விரைவில் டும்டும்டும் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Author: Shree
29 May 2023, 10:01 am

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர பின்புலம் இருந்தாலும் தனது சொந்த முயற்சியால் தான் முன்னேறி நல்ல இடத்திற்கு வருவேன் என்பதை லட்சியமாக வைத்து அயராது உழைத்துக்கொண்டிருப்பவர் நடிகை ரிச்சர்ட் ரிஷி. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்தின் சொந்த மச்சான். ஆம், நடிகை ஷாலினியின் அண்ணன் தான் ரிச்சர்ட் ரிஷி.

இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் சில மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் திரௌபதி படத்தில் நடித்து விமர்சிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது இயக்கத்திலே ருத்ர தாண்டவம் என்ற ஜாதிவெறி மற்றும் தலித் விரோத உணர்வுகளைப் பரப்பிய படத்தில் நடித்ததால் மோசமான விமர்சனத்தை எதிர்கொண்டார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து கவனம் செலுத்தி வந்த ரிச்சர்ட் ரிஷி தற்போது பிரபல கவர்ச்சி நடிகையான யாஷிகா ஆனந்தை காதலிப்பதாக முத்த புகைப்படத்துடன் அதிகாரபூர்வமாக அறிவித்து காதலை உறுதிப்படுத்தியிருக்கிறார். அஜித் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் முழுக்க வைரலாக ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  • suresh gopi name removed from empuraan title card and cuts in 24 places சுரேஷ் கோபியின் பெயர் நீக்கம், 24 கட்… எம்புரான் மறு சென்சாரில் திடீர் மாற்றம்…