ஜக்கம்மா…. மனைவிக்கு மைதீட்டி அழகு பார்த்த கணவர்… ரித்திகாவின் கியூட் வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்!

Author: Shree
20 October 2023, 11:30 am

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் த்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.

இந்த தொடரில் அமிர்தா என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகை ரித்திகா. அதற்கு முன்னர் ராஜா ராணி நாடகத்தில் கதாநாயகனுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து அவர் போராடி வந்தார். பின்னர் நடிகை ரித்திகாவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நடிகை ரித்திகா பல ரசிகர்களைப் பெற்று இருக்கிறார். பாலா உடன் நடிகை ரித்திகா சேர்ந்து செய்த சேட்டைகள் ரசிக்கும்படியாக இருந்தது. நடிகை ரித்திகா சமீபத்தில் விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக வேலை பார்த்து வரும் வினு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வினு மலையாளி என்பதால் கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் வைத்து எளிமையாக நடிகை ரித்திகா திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வரும் ரித்திகா தற்ப்போது கணவருடன் அன்பு சேட்டை செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் அவரது கணவர் ரித்திகாவுக்கு மைதீட்டி ஜக்கம்மா போன்று மேக்கப் செய்த இந்த வீடியோ பார்க்கவே ரொம்ப கியூட்டாக இருக்கிறது. இதற்கு நெட்டிசன்ஸ் பலர் லைக்ஸ் குவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ:

  • Sex is for pleasure, not for having a baby: Famous actress's bold comment உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!