நான் முடியாதுன்னு சொன்னதும் என் தோழியை கூப்பிட்டார் – ரியாஸ் கான் மீது இளம் நடிகை பாலியல் புகார்!

Author:
26 August 2024, 10:50 am

கட்டுமஸ்தான உடல் தோற்றத்துடன் பெரும்பாலான தமிழ் படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலம் ஆனவர் தான் நடிகர் ரியாஸ். பிரசாந்தின் வின்னர் திரைப்படத்தில் கட்டத்துரைதேவர் என்ற ரோலில் நடித்த இவர் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பலமொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் சுறா, ஆதவன், திருப்பதி, கஜினி , வின்னர், பாபா உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார் . இதனிடையே பழம்பெரும் நடிகையான கமலா காமேஷின் மகளான உமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு “ஷாரிக்” என்கிற ஒரு மகன் இருக்கிறார். கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி போட்டியாளராக ஷாரிக் பங்கேற்றார். அண்மையில் தான் மகன் ஷாரிக்கிற்கு நீண்ட நாள் காதலியுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால். மலையாள சினிமாவில் பிரபல இளம் நடிகையாக இருந்து வரும் நடிகை ரேவதி சம்பத் பிரபல மலையாள நடிகர் சித்திக் மீது பாலியல் புகார் கூறியிருந்தது பரபரப்பாக பேசப்பட்டது.

அதையடுத்து தற்போது பிரபல தமிழ் சினிமாவின் வில்லன் நடிகர் குணச்சித்திரன் நடிகருமான ரியாஸ்கான் மீது பாலியல் புகார் தெரிவித்து பெரும் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறார். இது குறித்து கூறிய நடிகை ரேவதி சம்பத், “நடிகர் ரியாஸ்கான் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார். மேலும் போனில் தப்பு தப்பாக பேசி தொடர்ந்து பாலியல் டார்ச்சர் கொடுத்து வருகிறார் .

அத்துடன் நான் அட்ஜெஸ்ட்மெண்டிற்கு சம்மதிக்காததை அடுத்து என்னுடன் உறவுக்கு சம்மதிக்கும் உனது தோழியை யாராவது இருந்தாலும் சொல்லு என ரியாஸ் கான் என்னிடம் தவறாக கேட்டார் என தெரிவித்து சம்பத் அந்த புகாரில் பரபரப்பாக கூறியிருக்கிறார். இதை அடுத்து இந்த விஷயம் கோலிவுட்டில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வில்லன் நடிகர் ரியாஸ் கானின் முகத்தை தோலுரித்து காட்டியிருக்கும் ரேவதி சம்பத் தைரியத்தை ரசிகர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி