மூக்குத்தி அம்மனுக்கு பதில் மாசாணி அம்மன்… சூர்யாவுக்கு RJ பாலாஜி வைத்த டுவிஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2024, 5:45 am

சூர்யாவை வைத்து ஆர்ஜே பாலாஜி இயக்கும் படம் குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா கங்குவாவை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ஆர்ஜே பாலாஜி இயக்கும் படத்தில் இணையவுள்ளார்.

RJ balaji

எல்கேஜி படம் மூலம் நடிகராக அவதாரம் எடுத்த ஆர்ஜே பாலாஜி பின்னர், மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி வெற்றியும் கண்டார்.

தற்போது மூக்குத்தி அம்மன் 2ஆம் பாகத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார்.
இதனால் அந்த படத்தை இயக்க வேண்டிய ஆர்ஜே பாலாஜி முன்னணி நடிகரான சூர்யாவுடன் கைக்கோர்த்துள்ளார்.

Surya RJ balaji New Movie

அதாவது நடிகர் விஜய் கடைசி படமாக தளபதி 69ல் நடித்து வருகிறார். இதற்கு முன் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார்

ஆனால் கதையை கேட்டவுடன் அது நமக்கு செட்டாகுமா என தெரியவில்லை அதனால் அந்த கதையை வேண்டாம் என ஒதுங்கிவிட்டார்.

அந்த கதையை தான் தற்போது சூர்யா நடிக்க ஒப்புக் கொணடுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாசாணிஅம்மன் என பெயர்வைத்துள்ள அந்த படத்தில் பிரபல நடிகை கடவுளாக நடிக்க உள்ளதாகவும், சூர்யாவும் கடவுள் கதாபாத்திரத்தில் நடிக் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

கடவுள் கதாபாத்திரம் நமக்கு செட் ஆகாது என்று தான் விஜய் ஒதுங்கியுள்ளதாக வலைப்பேச்சில் இந்த தகவலை கூறியுளள்து குறிப்பிடத்தக்கது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…