பெண்களை அடித்து, உதைத்து, சித்ரவதை செய்தால் தான் ரசிப்பீங்களா? “அனிமல்” படத்தை கிழித்த RJ பாலாஜி!

Author: Rajesh
18 January 2024, 1:38 pm

ஆர் ஜே-வாக தனது கெரியரை தொடங்கிய ஆர்ஜே பாலாஜி தற்போது இயக்குனர், நடிகர் என பிசியாக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். அந்த வகையில், ஆர்ஜே பாலாஜி இயக்கிய LKG, மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூலை வாரி குவித்தது. கடந்த ஆண்டு ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷம் திரைப்படமும் அதிக அளவில் ரீச்சானது.

அவரது திரைப்படங்கள் காமெடி கலந்த கலாட்டாவாக வெளியாகி பெருவாரியான ரசிகர்களை ஈர்த்தது. இவர் ஆரம்பத்தில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்களை ஏடாகூடமாக விமர்சித்து அதன் மூலம் பிரபலம் ஆகினார். இந்நிலையில் சமீபத்தியில் ராஷ்மிகா மந்தனா – ரன்பீர் கபூர் நடிப்பில் வெளிவந்த அனிமல் படத்தை பற்றி மோசமாக விமர்சித்துள்ளார் ஆர். ஜே பாலாஜி.

அவர் கூறியுள்ளதாவது, பெண் பிள்ளைகளையும், ஆண் பிள்ளைகளையும் சரி சமமாக வளர்க்க வேண்டும். அவர்கள் இருவரையும் ஒரே மாதிரி நடத்தவேண்டும். உதாரணத்திற்கு என் வீட்டில் என்னுடைய தாத்தா எல்லா வேலைகளையும் செய்வார். அவர் இல்லை என்றால் நான் செய்வேன். அப்படி இருக்கும் எனக்கே என் மனைவி தொடர்ந்து 4 நாட்கள் சமைக்கவில்லை என்றால் கடுமையாக கோபம் வரும். என்னை போலவே அவளும் வேளைக்கு சென்று வருகிறார்கள்.

rj balaji - updatenews360

எனவே நான் செய்வது தவறு என்று எனக்கே தெரியும். பின்னர் சூழ்நிலையை புரிந்துக்கொண்டு செயல்படுவேன். அப்படி சென்றுக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் பெண்ணை அடித்து உதைத்து சித்ரவதை செய்வதை நியாயம் என்பது போல் படம் எடுத்து கோடிக்கணக்கான ரசிகர்கள் மனத்தில் விஷத்தை வளர்த்து விடுகிறது இந்த சினிமா.அப்படிப்பட்ட படங்களையும் தியேட்டருக்குள் ஒரு கூட்டம் ரசித்து பார்ப்பதை என்னால் பார்க்க முடியாது. இது போன்ற திரைப்படங்கள் சமூதாய சீர்கேட்டை வளர்கிறது என அனிமல் திரைப்படத்தை மோசமாக விமர்சித்துள்ளார் ஆர்ஜே பாலாஜி.

  • Suriya Act in Luck Bashkar Directors Next Movieலக்கி பாஸ்கர் இயக்குநரின் அடுத்த பிரம்மாண்டம்.. சூர்யாவுக்கு லக்கோ லக்!
  • Views: - 345

    0

    0