“மயில்சாமி”செய்த நெகிழ்ச்சியான செயல்….ஆர்.ஜே.பாலாஜி-க்கு நடந்த திருப்புமுனை..!

Author: Selvan
28 November 2024, 5:21 pm

மயில்சாமியின் அர்ப்பணிப்பு

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக மட்டுமின்றி குணச்சித்திர கதாபாத்திரத்திலும் ஜொலித்தவர் நடிகர் மயில்சாமி.இவர் இறந்த பின்னால் இவரைப்பற்றிய நல்ல நல்ல விசயங்கள் வெளியவந்தன.இப்படி ஒரு மகா கலைஞரை கொண்டாட மறந்துட்டுமே என்று சிலர் புலம்பினர்.

RJ Balaji about Mayilsami's generosity

அந்தவகையில் தற்போது ஆர் ஜே பாலாஜி மயில் சாமி செய்த ஒரு சம்பவத்தை நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

அதாவது ஆர் ஜே பாலாஜியும் மயில் சாமியும் “ஏதோ வேலை விசயமாக கார்ல போய்ட்டு இருக்கும் போது,ரோடு போடுறவங்க வேலை பார்த்துட்டு இருந்தாங்களா,உடனே காரை நிறுத்த சொல்லி,அவர் பேக்கில் இருந்து பணத்தை எடுத்து அங்க இருக்குற ஒவ்வொருத்தருக்கும் 500 ரூபாய் கொடுத்துள்ளார்”.

இதையும் படியுங்க: தனுஷை நம்பிய இயக்குனர்…கடைசியில் என்ன ஆச்சுன்னு தெரியுமா..!

கருணை நிரம்பிய செயல்

ஆர் ஜே பாலாஜி ஏன் திடீர்னு இப்பிடி செஞ்சிங்கனு கேட்கும் போது,அதற்கு மயில் சாமி கொஞ்சோ அங்க திரும்பி பாருங்க அவுங்க முகம் எவ்ளோ சந்தோசமா இருக்குனு சொன்னாரா…அப்போது இருந்து ஆர் ஜே பாலாஜியும் எப்போது வெளியே போனாலும் கையில் ஒரு குறிப்பிட்ட பணத்தை எடுத்துட்டு போவாராம்.

இந்த ஒரு நல்ல பழக்கத்தை அவருகிட்ட இருந்து கத்துக்கிட்டு என்னுடைய வாழ்க்கையில் பின்பற்றுகிறேன் என்று அந்த நிகழ்ச்சியில் கூறியிருப்பார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!