இரண்டாம் திருமணம் செய்து கொண்ட ஆர் ஜே பாலாஜி.. – அவரே வெளியிட்ட உண்மை..!

Author: Vignesh
25 January 2024, 5:33 pm

ஆர் ஜே-வாக தனது கெரியரை தொடங்கிய ஆர்ஜே பாலாஜி தற்போது இயக்குனர், நடிகர் என பிசியாக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். அந்த வகையில், ஆர்ஜே பாலாஜி இயக்கிய LKG, மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூலை வாரி குவித்தது. கடந்த ஆண்டு ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷம் திரைப்படமும் அதிக அளவில் ரீச்சானது.

rj balaji - updatenews360

அவரது திரைப்படங்கள் காமெடி கலந்த கலாட்டாவாக வெளியாகி பெருவாரியான ரசிகர்களை ஈர்த்தது. இவர் ஆரம்பத்தில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்களை ஏடாகூடமாக விமர்சித்து அதன் மூலம் பிரபலம் ஆகினார். இந்நிலையில் சமீபத்தியில் ராஷ்மிகா மந்தனா – ரன்பீர் கபூர் நடிப்பில் வெளிவந்த அனிமல் படத்தை பற்றி மோசமாக ஆர். ஜே பாலாஜி விமர்சித்து இருந்தார்.

rj balaji - updatenews360

சமீபத்தில் சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆர்ஜே பாலாஜி அந்த படத்தின் ப்ரோமோஷன்காக பல பேட்டிகளில் கலந்துகொண்டு பேட்டியளித்து வருகிறார். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் திருமணம் பற்றியும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு டாஸ்க் பாலாஜியிடம் நாலு அல்லது ஐந்து மாதத்திற்கு ஒரு போன் நம்பர் மாத்துவேன். எனக்கு இரண்டு முறை கல்யாணம் நடந்தது. நான் ஓடிப்போய் கல்யாணம் செய்து கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

rj balaji

அதாவது, எனது முதல் திருமணம் முனி படம் எடுத்த ஷூட்டிங்கில் தான் நடைபெற்றது. முதலில் ஓடிப் போய் கல்யாணம் செய்தேன். அதன் பின்னர் குடும்பத்தினர் முன்னனியில், இன்னொரு முறை கல்யாணம் செய்து வைத்தார்கள். இதற்கு சித்து இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கலாமே என்று கேட்டதற்கு, அதாவது இந்த ஷோ முடிந்ததும் இந்த படம் பிரமோஷனுக்கு ஏன்டா வந்தோம் என்று யோசிக்காமல் ஜெயிலையும் சென்று அப்படி யோசிக்கணும், அப்படித்தானே என்று ஆர்ஜே பாலாஜி காமெடியாக பதில் அளித்துள்ளார்.

rj balaji

மேலும், ஏண்டா நல்ல நாள்ல கல்யாணம் பண்ணாம ஓடிப்போய் கல்யாணம் பண்ணிங்க என்று கூறி நல்ல நாளில் திருமணம் செய்து வைத்ததாகவும், நான் 21 வயதில் ஓடிப்போய் கல்யாணம் பண்ணியதால், அப்போது RJ வாக வேலை செய்யவில்லை. ஆஃபர் லெட்டர் மட்டுமே இருந்தது.

rj balaji

இந்த நிலையில், ஒன்பதாயிரத்து எழுநூறு ரூபாய் சம்பளம் ஹாஸ்டலில் இருந்த போது ஓடிப்போய் கல்யாணத்தை பண்ணதை என் அப்பாவிடம் சொன்னேன். முதல் மனைவி இரண்டாம் மனைவி எல்லாமே ஒரே மனைவிதான் என்று ஆர்ஜி பாலாஜி கலகலப்பாக தெரிவித்துள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 683

    0

    0