“South Indian அமீர் கான்” ச்சீ… எனக்கே சிரிப்பு வருது – பாராட்டிய பிரபலத்தை கொச்சைப்படுத்திய RJ பாலாஜி!

Author: Rajesh
2 February 2024, 1:53 pm

ஆர் ஜே-வாக தனது கெரியரை தொடங்கிய ஆர்ஜே பாலாஜி தற்போது இயக்குனர், நடிகர் என பிசியாக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். அந்த வகையில், ஆர்ஜே பாலாஜி இயக்கிய LKG, மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூலை வாரி குவித்தது. கடந்த ஆண்டு ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷம் திரைப்படமும் அதிக அளவில் ரீச்சானது.

rj balaji - updatenews360

அவரது திரைப்படங்கள் காமெடி கலந்த கலாட்டாவாக வெளியாகி பெருவாரியான ரசிகர்களை ஈர்த்தது. இவர் ஆரம்பத்தில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்களை ஏடாகூடமாக விமர்சித்து அதன் மூலம் பிரபலம் ஆகினார். மிக குறுகிய காலத்திலே டாப் ஹீரோ ரேஞ்சிற்கு பிரபலம் ஆன ஆர்ஜே பாலாஜி பல கோடி சொத்து வைத்திருக்கும் இவர் தான் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட கனவு கார் ஒன்றை பார்த்து பார்த்து வடிவமைத்துள்ளாராம்..

அந்த காரில் பல புதிய அம்சங்கள் இருப்பதை அறிந்த ரசிகர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர். டெல்லிக்கு சென்று அந்த காரை பார்த்து பார்த்து தன் விருப்பத்திற்கு ஏற்ப தயார் செய்துள்ளாராம். கிட்டத்தட்ட சாலையில் மிதக்கும் சொகுசு கப்பல் போல பல அதிநவீன வசதிகளுடன் இந்த கார் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த சிங்கப்பூர் சலூன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய பிரபல காமெடி நடிகர் ஆர்.ஜே பாலாஜியை, “South Indian அமீர் கான்” என எல்லைமீறி புகழ்ந்து தள்ள உடனே நானா? நானா சார்? இதையெல்லாம் கேட்டால் எனக்கே சிரிப்பு வருது சார் என தனது வழக்கமான பாணியில் கலாய்த்தார். இதற்கு நெட்டிசன்ஸ் உப்புசப்பில்லாத படத்திற்கு ஏன்ய்யா இவ்ளோவ் அலப்பறை பண்றீங்க என விமர்சித்துள்ளனர். இதோ அந்த வீடியோ:

https://www.youtube.com/shorts/NCALpNRCreM
  • Game Changer trailer release ராம் சரண் இத்தன கெட்டப்பா…பிரம்மாண்டமாக வெளிவந்த கேம் சேஞ்சர் ட்ரைலர்..!
  • Views: - 402

    0

    0