Call Me Sir.. ஷூட்டிங்கில் மரியாதையோடு கூப்பிட சொன்ன தமிழ் நடிகர்.. RJ பாலாஜி செய்த செயல்..!
Author: Rajesh12 February 2023, 7:00 pm
ரேடியோ ஆர் ஜே-வாக தனது கெரியரை தொடங்கிய ஆர்ஜே பாலாஜி தற்போது இயக்குனர், நடிகர் என பிசியாக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். அந்த வகையில், ஆர்ஜே பாலாஜி இயக்கிய LKG, மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூலை வாரி குவித்தது. கடந்த ஆண்டு ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷம் திரைப்படமும் அதிக அளவில் ரீச்சானது.
தற்போது ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ரன் பேபி ரன் திரைப்படத்தில் ஆர்ஜே பாலாஜி நடிப்பு பெரிதும் பேசப்பட்டு வருகிறது. ஆர்.ஜே.பாலாஜி ஹீரோ மற்றும் இயக்குனராக அறிமுகமாவதற்கு முன் சில திரைப்படங்களில் காமெடியனாக மற்றும் சில முக்கிய துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார்.
அப்படி 2013ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் சித்தார்த் ஹீரோவாக நடித்து வெளியான “தீயா வேலை செய்யனும் குமாரு” திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்திருந்தார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த ஒரு சம்பவம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
அத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, சுந்தர்.சி, சித்தார்த் ஆகியோர் எப்போதும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவார்களாம். மேலும், சித்தார்த்தும் ஆர்.ஜே.பாலாஜியும் வாடா போடா என பேசிக்கொள்வார்களாம். ஒரு நாள் அத்திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த நடிகர் ஒருவர், ஆர்.ஜே.பாலாஜியை தனியாக அழைத்து “டைரக்டர் சார் கூட உட்கார்ந்து சாப்புடுறீங்க. அவங்க கூப்பிட்டாலும் நாம போகக்கூடாது.
அதே மாதிரி சித்தார்த்தை பேர் சொல்லி கூப்பிடாதீங்க, சார்ன்னு கூப்பிடுங்க” என கூறினாராம். இதனை, ஒரு நாள் பாலாஜி சுந்தர்.சியிடம் கூறியதற்கு, அவர் “இதெல்லாம் ரொம்ப பழைய வழக்கம். சாப்பிட கூப்பிட்டா யாரும் கூட வந்து உட்கார்ந்து சாப்பிட மாட்டாங்க. நான் யாரையும் அப்படி நினைக்கிறது இல்ல, அவங்களா நினைச்சிக்கிறாங்க” என கூறினாராம்.