சொர்க்கவாசல் என்னுடைய கதை…வீடியோ வெளியிட்டு புலம்பும் உதவி இயக்குனர்…!

Author: Selvan
28 November 2024, 6:31 pm

ஆர் ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் திருட்டு கதையா.?

தமிழ் சினிமாவில் கதை திருட்டு பிரச்சனை காலம்காலமாக நீடித்து கொண்டிருக்கிறது.அந்தவகையில் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் நாளை ரிலீஸ் ஆகும் சொர்க்கவாசல் படத்தின் கதை என்னுடையது என்று உதவி இயக்குனர் ஒருவர் வீடியோ வெளியிட்டு தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Sorgavasal Story Theft Allegation Explained

அதில் கிளை சிறை என்கின்ற டைட்டிலில் நான் எழுதிய கதையின் கருவை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பினேன்.ஆனால் என்னுடைய கதை பிடிக்கவில்லை என்று சொன்னார்கள்.அதே கதையை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவன தயரிப்பில் ஆர் ஜே பாலாஜியை வைத்து உருவாக்கி,தற்போது எஸ் ஆர் பிரபு வெளியிடுகிறார்.

இயக்குனர் சித்தார்த் செல்வராகவனிடம் இந்த முழு கதையை சொல்லும் போது,அவர் இந்த கதையை நீங்கள் தான் எழுதினீங்களா என்று கேட்டுள்ளார்.அதை செல்வராகவனே ஒரு நிகழ்ச்சியில் கூறியிருப்பார்.இந்த நிகழ்வையும் குறிப்பிட்டு,அவர் புலம்பும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

#sorgavasal is my script

சரமாரி கேள்வி கேட்கும் ப்ளூ சட்டை மாறன்

தற்போது அவருக்கு ஆதரவாக ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய x தளத்தில் அந்த விடீயோவின் லிங்க் போட்டு பதில் சொல்லுவார்களா தயாரிப்பாளர்கள் மற்றும் ஆர் ஜே பாலாஜி என்று கேள்வியும் கேட்டுள்ளார்.

சினிமா விமர்சனங்களுக்கு உடனடி தடைபோட துடிப்பவர்கள்…கதை திருட்டு புகார்கள் வந்தால் மட்டும் ஏன் அலட்சியமாக இருக்கீர்கள் என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார்.

தற்போது வரை இயக்குனரின் குற்றச்சாட்டுக்கு சொர்க்கவாசல் படக்குழு மற்றும் இயக்குனர் சித்தார்த்-யிடம் இருந்து உரிய பதில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • singampuli shared the experience on mayandi kudumbathar movie நான் நடிக்கவே மாட்டேன்னு சொன்னேன், ஆனா அவர்தான் என்னைய?- ஓபனாக போட்டுடைத்த சிங்கம்புலி…
  • Close menu