சூர்யாவை எதிர்த்து நடிப்பாரா பிரபல ஹீரோ…ஆர்.ஜே.பாலாஜி போடும் மாஸ்டர் பிளான்…!
Author: Selvan10 December 2024, 6:59 pm
வில்லனாக களமிறங்கும் பிரபல ஹீரோ
தமிழ் சினிமாவில் ஆர் ஜே பாலாஜி நடிகராக கலக்கி வருகிறார்.அவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சொர்கவாசல் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று,வெற்றிகரமாக தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அவர் தற்போது சூர்யாவை வைத்து சூர்யாவின் 45 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சூர்யாக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.
அத்துடன் ஆர்.ஜே.பாலாஜியும் இப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார்.இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பதாக இருந்த நிலையில்,திடீரென அவர் படத்தில் இருந்து விலகி,தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கார் படத்தில் இணைந்துள்ளார்.
இதையும் படியுங்க: “ஆடுகளம்”படத்துக்கு முதலில் வெற்றிமாறன் வைத்த பெயர்…தனுஷ் எடுத்த முடிவு…!
விஜய் சேதுபதி vs சூர்யா
விறுவிறுப்பாக நடைபெறும் இப்படத்தில் அடுத்து ஒரு சுவாரசியமான அப்டேட் வெளியாகியுள்ளது.அதாவது படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு நடிகர் விஜய்சேதுபதியை ஆர்.ஜே.பாலாஜி அணுகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில்,அவரது 50 வது படமான வெளிவந்த மகாராஜா உலகளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் நிலையில்,அடுத்து அவர் வில்லனாக நடிப்பாரா..?அதுவும் சூர்யாவை எதிர்த்து நடிப்பாரா..என்ற கேள்வியும் கோலிவுட் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
ஒருவேளை ஆர்.ஜே.பாலாஜி படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்தால் இப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.