கமல் என்ன கிழிச்சாரு..? கோபத்தில் கொந்தளித்த ரோபோ சங்கர்..!

Author: Vignesh
31 October 2023, 12:30 pm

விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் ரோபோ ஷங்கர். தற்போது தமிழ் சினிமாவில் பிசியான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவரது மனைவி பிரியங்காவும் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர்களது மகள் இந்திரஜாவும் தளபதி விஜயின் பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்து தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதையடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிகர் ரோபோ ஷங்கர் வாய்ப்பு கிடைக்க நடித்து வருகிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும், மாரி, புலி போன்ற திரைப்படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார். அண்மையில் கூட அனுமதியின்றி அலெக்சாண்டரியன் வகை பச்சை கிளிகளை வளர்த்து சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில் ரோபோ சங்கரின் ஆளே அடையாளம் தெரியாத வகையில் படு ஒல்லியாக எலும்பும் தோலுமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.

robo shankar-updatenews360

அளவுக்கு அதிகமான மதுவால் மஞ்சள் காமாலை ஏற்பட்டு கஷ்டப்பட்டு வந்த இவர் அவருடைய மனைவியால் மீண்டு வந்தார். மீண்டும் பாடி பில்டிங் போட்டியில் கலந்தும் கொண்டார். இந்த நிலையில், உலக நாயகனின் தீவிரமான ரசிகராக இருக்கும் ரோபோ ஷங்கர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

33 வருடம் கழித்து மணிரத்தினமும் இணைய உள்ளார். என்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரோபோ சங்கர் உலகநாயகன் படத்தின் அப்டேட் என்ன என்று தலைவர் அலுவலகத்தில் கால் செய்து கேட்கிறேன். நாயகன் படம் வெளியான போது கமலா தியேட்டரில் கொண்டாடினோம்.

இந்தியன் 2வுக்காக நானும் காத்திருக்கிறேன். உலக நாயகன் நம்ம ஊர்ல இருக்க வேண்டிய ஆடை கிடையாது. மீண்டும் வருகிறார் நாயகன் கமலா தியேட்டரில் வேற லெவலில் கொண்டாட்டம் இருக்கப்போகிறது. லியோ படத்தில் கமலஹாசன் வாய்ஸ் வருவதை பலர் கிண்டல் செய்து வருகிறார்கள் என்பதை அந்த இயக்குனர் கிட்ட கேட்கணும்.

robo shankar

கமல் என்ன கிழிச்சார் என்று கேட்க யாருக்குமே தகுதியே கிடையாது என்று ரோபோ சங்கர் காட்டமாக பேசியிருந்தார். மேலும், உம்மை தெரியாதவர்கள் உலகில் யாருமில்லை உண்மை தெரியாதவர்கள் இருந்தும் தேவையில்லை என்ற போஸ்டரை நான் தான் அடிக்கப் போகிறேன். லோகேஷ் கனகராஜ் கமல் சாரின் தீவிர ரசிகன் என்று ரோபோ சங்கர் தெரிவித்தார்.

  • Sukumar cinema exit statement அல்லு அர்ஜூனால் சினிமாவை விட்டு விலகும் புஷ்பா பட இயக்குநர்.. திடீர் அறிவிப்பு!
  • Views: - 448

    1

    0