கலகலப்பாக முடிந்த ரோபோ ஷங்கர் மகள் நிச்சயதார்த்தம்.. மகிழ்ச்சியில் இந்திரஜா; Celebration கிளிக்ஸ் இதோ..!

Author: Vignesh
3 February 2024, 1:08 pm

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான ரோபோ ஷங்கர் விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மேடை சிரிப்புரை மூலமாக பரவலாக அறியப்பட்டார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.

robo shankar-updatenews360

அதையடுத்து தமிழ் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க நடித்து வருகிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும், மாரி , புலி போன்ற திரைப்படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார். இவரது மனைவி பிரியங்காவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

robo shankar-updatenews360

இவர்களது மகள் இந்திரஜாவும் தளபதி விஜயின் பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்து பிரபலம் ஆனார். தொடர்ந்து தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நேரத்தில் ரோபோ ஷங்கர் கடந்த ஆறு மாத காலமாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து, எலும்பும் தோலுமாக இருந்து, அதன் பின்னர் தொடர் சிகிச்சை எடுத்து தற்போது நலமாக இருக்கிறார்.

robo shankar-updatenews360

முன்னதாக, இந்திரஜாவிற்கு அவரது முறை மாமாவுடன் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி விட்டன. இந்த நிலையில், பெரியவர்கள் முன்னிலையில், சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக நக்கீரன் கோபால் அம்மன் கிரியேஷன் சிவா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திரஜாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

robosankar
  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 437

    0

    0