கல்யாண கலை வந்துடுச்சு போல.. மெருகேறிய அழகில் ரோபோ சங்கரின் மகள்..!
Author: Vignesh16 August 2023, 4:00 pm
தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான ரோபோ ஷங்கர் விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மேடை சிரிப்புரை மூலமாக பரவலாக அறியப்பட்டார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.
அதையடுத்து தமிழ் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க நடித்து வருகிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும், மாரி , புலி போன்ற திரைப்படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார். இவரது மனைவி பிரியங்காவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவர்களது மகள் இந்திரஜாவும் தளபதி விஜயின் பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்து பிரபலம் ஆனார். தொடர்ந்து தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நேரத்தில் ரோபோ ஷங்கர் கடந்த ஆறு மாத காலமாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து, எலும்பும் தோலுமாக ஆகிவிட்டார் . அதன் பின்னர் தொடர் சிகிச்சை எடுத்து தற்போது நலமாக இருக்கிறார்.
எப்போதும் இன்ஸ்டாவில் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வரும் இந்திரஜா தனது மாமாவுடன் வெளியிடும் பதிவுகள் அதிகம். இதைப்பார்த்த ரசிகர் ஒருவர் உங்களது முறை மாமனை திருமணம் செய்யப்போகிறீர்களா என கேட்க அதற்கு இந்திரஜா ஆமாம் என பதில் அளித்து வந்தார்.
திருமணம் குறித்த தகவல் வரும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், தற்போது இந்திரஜா மணக்குளத்தில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்து கல்யாண கலை வந்துருச்சு தேதி எப்போ என்று கேட்டு வருகின்றனர்.