ரோபோ ஷங்கர் வீட்டில் விசேஷம்.. மகிழ்ச்சியாக அறிவித்த இந்திரஜா..!(Video)

Author: Vignesh
9 August 2024, 1:25 pm

திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர் இவர் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தொலைக்காட்சியில், இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள ரோபோ ஷங்கருக்கு இந்திரஜா என்னும் ஒரு மகள் இருக்கிறார். இவர், அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் அறிமுகமானார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருடைய மாமாவை திருமணம் செய்து கொண்ட இந்திரஜா ஷங்கருக்கு பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றது. இதன்பின் இருவரும் ஜோடியாக மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

சின்னத்திரை நிகழ்ச்சியில், நடுவர் ராதா எப்போது மகிழ்ச்சி செய்தி எங்களுக்கு சொல்ல போகிறீர்கள் என இருவரிடம் கேட்க இந்திரஜாவின் கணவர் நாங்கள் இருவரும் தாய், தந்தையாக போகிறோம் எனக் கூறி தனது மனைவி கர்ப்பமாக இருப்பதையும் வெளிப்படுத்தினார்.

இதன் பின்னர், நிகழ்ச்சிக்கு வந்த ரோபோ சங்கர் இங்கு இருப்பதிலேயே நான்தான் மிகவும் என் தாத்தா எனக்கூறி அந்த நிகழ்ச்சியில், உள்ள அனைவரும் இணைந்து கார்த்திக் இந்திரஜா தம்பதி வாழ்த்தி உள்ளனர்.

  • Vidamuyarchi total earnings worldwide போராடும் ‘விடாமுயற்சி’…இறுதி கட்டத்தை நோக்கி படத்தின் வசூல்.!
  • Close menu