உயிருக்கு போராடிய ரோபோ சங்கரா இது? கட்டுமஸ்தான தோற்றத்தில் ஆளே டோட்டலா மாறிட்டாரேப்பா!

Author:
21 August 2024, 6:02 pm

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் பிரபலமான நிகழ்ச்சி தான் கலக்கப்போவது யாரு? இந்த நிகழ்ச்சி டிஆர்பி உச்சத்தை தொட்டு பல திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை சினிமாவில் நட்சத்திரங்களாக ஜொலிக்க வைத்தது. அதில் முக்கியமானவர் தான் ரோபோ சங்கர் .

இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி அதன் மூலமாக தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கி பிரபலமான காமெடி நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் தற்போது தமிழ் சினிமாவில் வளம் வந்து கொண்டிருக்கிறார். 2007 ஆம் ஆண்டு தீபாவளி திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் வந்து போவார் .

அதை எடுத்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தின் மூலம் சவுண்ட் சங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி மக்களிடையே பிரபலமானார். தொடர்ந்து யாருடா மகேஷ் , வாயை மூடி பேசவும், மாரி, புலி உள்ளிட்ட பல திரைப்படங்களில் ரோபோ சங்கர் குணசேத்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் தோற்றம் ஏற்று நடித்திருக்கிறார்.

இதனிலே ரோபோ சங்கர் இடைப்பட்ட காலத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து கோரமான தோற்றத்தில் காணப்பட்டார். இதனால் ரோபோ சங்கருக்கு என்ன ஆனது? அவரது உடல்நிலை. சிகிச்சை பெற்று மீண்டும் பழைய நிலைக்கு வருமா? என ரசிகர்கள் சந்தேகித்து அவருக்காக பிரார்த்தனைகள் செய்து வந்தனர்.

அதன் பிறகு தொடர் சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயிலிருந்து முழுமையாக குணமாகி தற்போது பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது ரோபோ சங்கரின் லேட்டஸ்ட் போட்டோ சூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. அதில் கட்டு மஸ்தான தோற்றத்தில் மிரட்டலாக போஸ் கொடுத்திருக்கும் ரோபோ சங்கரை பார்த்த ரசிகர்கள் அட நம்ம ரோபோ சங்கரா? இது மீண்டும் பழைய மாதிரி ஆளே டோட்டலா மாறிட்டாரேப்பா என கமெண்ட் செய்து இந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்கள்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!