சாக கிடக்கும் போது ஒருத்தனும் வரல…. அந்த 3 பேர் தான் – நடிகர் ரோபோ ஷங்கர் வேதனை!

Author:
9 November 2024, 6:38 pm

திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர் இவர் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். தொலைக்காட்சியில், இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் ரோபோ ஷங்கர்.

robo shankar

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கஷ்ட காலத்தில் தான் சாக கிடக்கும்போது தனக்கு உறுதுணையாக இருந்தது பற்றியும் அப்போது தனக்கு யார் யார் உதவி செய்தார்கள் என்பது பற்றியும் நடிகர் ரோபோ சங்கர் மிகுந்த வருத்தத்தோடு பேசி இருக்கிறார் அந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியதாவது, என்னுடைய உடல்நிலை சரியில்லாத காலகட்டத்தில் தான் வாழ்க்கை என்றால் என்ன என்றே நான் உணர்ந்தேன் .

நண்பர்கள் என்றால் யார் என்று நான் உணர்ந்தேன். என்னை சுத்தி இருக்கிற கூட்டம் யாரு.. இருக்கும்போது வந்த கூட்டம் என்ன?இல்லாதபோது வந்த கூட்டம் என்ன? என்று நிறைய விஷயம் அந்த காலம் தான் எனக்கு கற்றுக் கொடுத்தது.

robo shankar daughter

அந்த நேரங்களில் எனக்கு பக்கபலமாக இருந்து எனக்கு மறுவாழ்வு கொடுத்தது என்னுடைய மனைவி மகள் மாப்பிள்ளை இவர்கள் மூன்று பேரால்தான் நான் தற்போது மீண்டும் உயிர் பிழைத்து இருக்கிறேன் என ரோபோ சங்கர் மிகுந்த உருக்கத்துடன் அந்த பேட்டியில் பேசி இருந்தார்.

  • Game Changer Shankar songs cost“கேம் சேஞ்சர்”பட பாடலுக்கு இத்தனை செலவா…கோடிகளை மட்டுமே குறிவைக்கும் சங்கர்..!
  • Views: - 110

    0

    0