5 மாதம் மரணப்படுக்கை… என் உயிரை காப்பாற்றிய தெய்வம்… ரோபோ ஷங்கருக்கு உதவியது இந்த பிரபலமா!

Author: Shree
17 June 2023, 9:22 am

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான ரோபோ ஷங்கர் விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மேடை சிரிப்புரை மூலமாக பரவலாக அறியப்பட்டார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.

அதையடுத்து தமிழ் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க நடித்து வருகிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும், மாரி , புலி போன்ற திரைப்படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார். இவரது மனைவி பிரியங்காவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர்களது மகள் இந்திரஜாவும் தளபதி விஜயின் பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்து பிரபலம் ஆனார். தொடர்ந்து தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நேரத்தில் ரோபோ ஷங்கர் கடந்த ஆறு மாத காலமாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து, எலும்பும் தோலுமாக ஆகிவிட்டார் . அதன் பின்னர் தொடர் சிகிச்சை எடுத்து தற்போது நலமாக இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கடந்த 5 மாதமாக தான் மரண படுக்கையில் இருந்ததாகவும், அதிலிருந்து மீண்டு வர தனக்கு பெரிதும் உதவியர் நக்கீரன் கோபால் சார் தான் என உருக்கமாக கூறினார். அவர் தான் சரியான சமயத்தில் வந்து ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற வைத்து என்னை சரி செய்தார். அவர் மட்டும் அப்படி செய்யவில்லை என்றால் நான் இன்னேரம் தற்கொலை செய்துக்கண்டு இறந்திருப்பேன் என கூறினார்

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 424

    1

    0