நல்ல உடல் எடையுடன் இருந்த ரோபோ சங்கர் திடீரென உடல் எடை குறைந்து ஆளு அடையாளம் தெரியாமல் மாறிப் போய் இறந்தார். இதனால் பல்வேறு சர்ச்சைகளும் பல்வேறு காரணங்களும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் முதன் முறையாக மனம் திறந்து ரோபோ சங்கர் தனக்கு ஏற்பட்ட பிரச்சினை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் முதன் முதலில் மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தை தொடங்கினார். அதன்பின் கலக்கப்போவது யாரு, அசத்துப் போவது யாரு, அது இது எது, போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல குரலில் பேசி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.
அதற்குப்பின் மிகவும் பிரபலமான ரோபோ ஷங்கருக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து அடுத்தடுத்து வாய்ப்புகள் வர பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார். இவர் நடித்த படங்களான மாரி, விசுவாசம், வேலைக்காரன், பிகில் போன்ற படங்கள் இவரை இன்னும் பிரபலமாக்கியது என்று சொல்லலாம்.
ரோபோ ஷங்கர் எப்போதும் கொளு கொளுவென கொஞ்சம் அதிக எடையுடன் தான் இருப்பார் ஆனால் தற்போது பார்க்கவே பரிதாபமாக மாறிவிட்டார். உடல் எடை குறைந்ததற்கான காரணமாக அவருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற ரோபோ சங்கர் தனது உடல் எடை பற்றி தெரிவித்திருக்கிறார். அதில் அவர் தான் உடல் எடை கொஞ்சம் குறைப்பதற்காக டயட்டில் இருந்ததாகவும், அப்போது தனக்கு மஞ்சள் காமாலை நோய் வந்துவிட்டது. இதனால் உடல் எடை இன்னும் குறைந்ததாகவும், இந்த நோயால் கஷ்டப்பட்டபோது எல்லோரும் தன்னை நன்றாக பார்த்துக் கொண்டார்கள் என்றும், அதனால் தான் விரைவில் குணமடைய முடிந்தது என தெரிவித்திருந்தார்.
மேலும், தன் நகைச்சுவையால் பலரையும் சிரிக்க வைத்தவன் தான் என்றும், அதேபோல தன் மனக்கவலையை போக்கி இந்த நோயிலிருந்து வெளிவர காரணமாக இருந்த காரணமாக இருந்தது காமெடி ஷோக்கள் தான் என தெரிவித்திருந்தார்.
மேலும், ராமர் காமெடியை பார்த்து உருண்டு உருண்டு விழுந்து சிரித்ததாகவும், கடந்த நான்கு மாதங்களாக காமெடி நிகழ்ச்சிகளை மட்டுமே பார்த்து தான் பழைய நிலைக்கு வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.