அம்மன் உருவத்தில் ரோபோ ஷங்கர் மனைவி… நெகிழ்ந்து போய் வழிபட்ட குடும்பத்தார்(வீடியோ)

Author: Shree
10 August 2023, 6:05 pm

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான ரோபோ ஷங்கர் விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மேடை சிரிப்புரை மூலமாக பரவலாக அறியப்பட்டார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.

அதையடுத்து தமிழ் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க நடித்து வருகிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும், மாரி , புலி போன்ற திரைப்படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார். இவரது மனைவி பிரியங்காவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர்களது மகள் இந்திரஜாவும் தளபதி விஜயின் பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்து பிரபலம் ஆனார். தொடர்ந்து தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நேரத்தில் ரோபோ ஷங்கர் கடந்த ஆறு மாத காலமாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து, எலும்பும் தோலுமாக ஆகிவிட்டார் . அதன் பின்னர் தொடர் சிகிச்சை எடுத்து தற்போது நலமாக இருக்கிறார்.

இந்நிலையில் ரோபோ ஷங்கர் மனைவி பிரியங்கா வராஹி அம்மன் தோற்றத்தில் வேடமிட்டு தத்ரூபமாக அம்மன் போன்றே காட்சியளித்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தை ஈர்த்து மெய்சிலிர்க்க வைத்துவிட்டார். அம்மன் வேடமிட்டதும் பிரியங்காவை அவரது குடும்பத்தார் கடவுளாகவே வழிபட்டுள்ளனர். இதற்கு ரசிகர்கள், அம்மனை நேரில் பார்த்தது போல் இருக்கிறது என கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ:

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?