பரிதாப நிலையில் கிடக்கும் கணவர்… 18 வயசு பெண் போல் மணக்கோலத்தில் ரோபோ ஷங்கரின் மனைவி!

Author: Shree
31 May 2023, 6:21 pm

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான ரோபோ ஷங்கர் விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மேடை சிரிப்புரை மூலமாக பரவலாக அறியப்பட்டார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.

அதையடுத்து தமிழ் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க நடித்து வருகிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும், மாரி , புலி போன்ற திரைப்படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார். இவரது மனைவி பிரியங்காவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர்களது மகள் இந்திரஜாவும் தளபதி விஜயின் பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்து பிரபலம் ஆனார். தொடர்ந்து தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நேரத்தில் ரோபோ ஷங்கர் கடந்த ஆறு மாத காலமாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து, எலும்பும் தோலுமாக ஆகிவிட்டார் . அதன் பின்னர் தொடர் சிகிச்சை எடுத்து தற்போது நலமாக இருக்கிறார்.

இந்நிலையில் அவரது மனைவி பிரியங்கா தற்போது 18 வயது பெண் போன்று மணக்கோலத்தில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, ‘மாற்றங்கள் என்ற ஒன்றை இந்த உலகில் இறைவன் தோற்றுவித்த மாறாத நியதி. வாழ்க்கையில் இதை நாம் புரிந்து வாழ பழகிவிட்டால் யாருடைய மாறுதலும் நம்மை பலமிழக்க செய்யாது’ என்ற பதிவிட்டுள்ளார். இதற்கு பலர் லைக்ஸ் குவித்தாலும் சில strangers, கணவர் இப்படி ஒரு மோசமான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும்போது உங்களுக்கு இதெல்லாம் கேட்குதா? என விமர்சித்துள்ளனர்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!