ரோபோ குரங்கு…. நடிக்க தெரியாத உனக்கு ரூ.100 கோடி சம்பளமா? “கல்கி 2898” பிரச்சனையில் சிக்கிய பிரபாஸ்!

Author: Shree
21 July 2023, 4:45 pm

நடிகர் கமல் ஹாசன் தற்போது நாக் அஷ்வின் இயக்கத்தில் புதிய படமொன்றில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஹீரோவாக பிரபாஸ் நடித்துள்ளார். மேலும் ஹீரோயினாக தீபிகா படுகோன் நடித்திருக்கிறார். இப்படத்தின் தலைப்பு தற்காலிகமாக project k என டைட்டில் வைத்திருந்தார்கள்.

இப்படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய ரோலில் நடித்துள்ளார். சுமார் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்கள். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் ‘கல்கி 2898 ஏடி’ என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தின் டீசரை நேற்று வெளியிட்டு ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளது படக்குழு. அறிவியல் புனைகதை படமான ‘கல்கி 2898’ 2898 -ஆண்டில் பூமியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஜனவரி 12, 2024 அன்று சங்கராந்தி அன்று படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்க பிரபாஸ் ரூ. 100 கோடி சம்பளம் வாங்கியிருப்பதை பிரபல பாலிவுட் விமர்சகர் உமைர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில், கல்கி படத்தில் மிகப் பெரிய பண மோசடி நடந்திருக்கிறது. இதற்கான விசாரணை விரைவில் தொடங்கும் மேலும், பிரபாஸ் தன்னை ரோபோட்டிக் குரங்காக காட்டி ரூ. 100 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக மோசமாக விமர்சித்து கலாய்த்து தள்ளியுள்ளார். இதற்கு முன்னர் வெளியான ஆதிபுருஷ் படமும் பெருந்தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ