புதிய சர்ச்சையில் நடிகை ரோஜா..! காலில் போடும் செருப்பை கையில் பிடித்த ஊழியர்.. – கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!
Author: Vignesh10 February 2023, 3:30 pm
செம்பருத்தி படம் வெளியானதும் அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபுதேவா, சரத்குமார் இப்படி பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார் நடிகை ரோஜா .
அடுத்து தெலுங்கு திரையுலகம் இவருக்கு Red Carpet விரித்தது. அப்படியே ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார். பிறகு செல்வமணியை திருமணம் செய்துகொண்டு சென்னையில் வாழ்ந்தார். இவர்களது காதல் தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்ட பெரும் கதையாகும்.

இந்நிலையில் அங்கேயே MLA ஆனார். இப்போது மினிஸ்டர் ஆகியுள்ளார். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இவர் புகைப்படங்கள் Upload செய்வார்.

இதனிடையே, கணவர் செல்வமணியும் சினிமா துறையில் முக்கிய புள்ளி என்பதால், அவர்கள் மகள் அன்ஷு மாலிகாவும் சினிமாவுக்கு நடிக்க வர இருக்கிறார் என அவ்வப்போது செய்தி உலா வந்த நிலையில், மகள் மேற்படிப்புக்கு செல்ல இருப்பதாகவும், அவருக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என ரோஜா தெரிவித்து இருந்தார்.

இதனிடையே, தற்போது ரோஜா தனது செருப்பால் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அதாவது ஆந்திராவில் கடற்கரையை பார்வையிட சென்றபோது கடல் நீரில் இறங்கி நடந்த நிலையில், அந்த நேரத்தில் ரோஜாவின் செருப்பை ஊழியர் ஒருவர் தான் தூக்கி வந்திருந்த அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆன நிலையில் பலரும் ரோஜா செயலுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.