செருப்பால அடிப்பாங்க… திருத்தணி முருகன் கோவிலில் ஆவேசமான ரோஜா..!

Author: Vignesh
13 November 2023, 6:35 pm

நடிகை ரோஜா வரும் தேர்தலில் ஜகன்மோகன் ரெட்டியின் கட்சியின் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். நாளை முதல் கந்தசஷ்டி விரதம் துவங்கும் நிலையில் வரும் சனிக்கிழமை அன்று சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தின் அமைச்சரும் நடிகையுமான ரோஜா திருத்தணி முருகன் கோவிலில் கணவர் ஆர்கே செல்வமணிவுடன் சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரோஜா மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், ஆந்திர மாநிலத்திற்கு நல்லது செய்பவர்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பதாகவும், யாருடனும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

ROJA - Updatenews360

மேலும், ஜாமினில் வெளிவந்துள்ள ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக வந்திருப்பதாக குறிப்பிட்ட ரோஜா அவர் மீண்டும் 21ஆம் தேதிக்குள் சிறைக்குச் செல்ல வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர், மக்கள் நேசிக்கும் தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி இருப்பதால் தவறு செய்பவர்களுக்கு ஊழல் செய்பவர்களுக்கும் கஷ்டம் தான் என்றார். மேலும், சினிமா துறையில் இருந்து தான் அரசியலுக்கு வந்திருந்தாலும், மக்களுக்கு நல்லது செய்து தன் வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருப்பதாக தெரிவித்தார். தன்னை எதிர்க்க முடியாமல் தன் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தான் ஒரு பெண் என்று பார்க்காமல் தன் நடத்தை பற்றி சந்திரபாபு நாயுடு விமர்சனம் செய்திருப்பதாக குற்றம் சாட்டிய ரோஜா, தனிநபர் விமர்சனத்தை எந்த ஒரு ஆணும் பெண்ணும் ஏற்க மாட்டார்கள் என்று கூறி செருப்பால்தான் அடிப்பார்கள் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?