இது ட்ரெய்லர் மட்டும்தான்.. மொத்த நிர்வாண படமும் வரும்.. மீண்டும் ரோஜாவுக்கு மிரட்டல் விடுத்த எதிர்க்கட்சி..!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் ரஜினி, சிரஞ்சீவி உள்பட தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ரோஜா தமிழ் சினிமாவிலும் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

2002-ஆம் ஆண்டு ரோஜா இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். அரசியலில் ஆர்வம் கொண்ட ரோஜா 1999-ல் தெலுங்கு தேச கட்சியில் இணைந்தார். 2009-ல் அக்கட்சியை விட்டு ரோஜா விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இவர் பின்னாளில் எம்.எல்.ஏ ஆனார். இரண்டாவது முறையாக நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது ஆந்திராவின் சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் ரோஜாவை அசிங்கப்படுத்தி பேசியது ஆந்திராவை அதிர்ச்சிக்குள்ளாகியது. தற்போது, அது குறித்து நடிகை ரோஜா கண்ணீருடன் பேசி உள்ளார். அதில், தான் நடித்த படத்தில் நிர்வாணமாக நடித்ததாக கூறி சித்திரவதை செய்கிறார்கள் என்றும், சட்டசபையில் சிடிகளும் காட்டப்பட்டது. அந்த சிடியில் இருப்பது நான்தான் என்று நிரூபிக்கவும் இல்லை.

என் குணத்தை மதிப்பிட நீங்கள் யார்? உங்கள் வீட்டு பெண்களாக இருந்தால் இப்படி பேசுவீர்களா? பேசினால் எப்படி இருக்கும் என்று பேசி இருக்கிறார். என்னை கேலி செய்தார்கள். உங்கள் கட்சியில் இருக்கும் போது நல்லவர்களாகவும், வேறு கட்சியில் இருக்கும் போது கெட்டவர்களாகவும் நான் எப்படி இருக்க முடியும். பண்டாரு சத்யநாராயண மூர்த்தி பேசியது என்னை புண்படுத்தி இருக்கிறது என்று ரோஜா கண்ணீருடன் பேசியதை தொடர்ந்து பண்டாரு சத்தியநாராயணா கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தெலுங்கு தேசம் கட்சி மகளிர் அணி தலைவர் வாங்கலபுடி அனிதா ரோஜாவை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். ரோஜா சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி மற்றும் மருமகளை பேசியிருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டி ரோஜா மீது அப்போது காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.

அமைச்சர்கள் மட்டும்தான் பெண்களா மற்றவர்கள் பெண்கள் இல்லையா என கேள்வியும் எழுவினர். சட்டப்பேரவையில், ரோஜா பேசியதை யாரும் மறந்து இருக்க மாட்டார்கள் என்று கூறி ரோஜாவை யாரும் பெண்ணென்று கருதவில்லை என்றும், அவரை ஒஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் கூட வெறுக்கிறார்கள் என தெரிவித்தார்.

பெண்களின் அனுதாபத்தை பெறுவதற்காக ரோஜா தற்போது அழுகிறார் எனவும் குற்றம் சாட்டினார். நான்கரை ஆண்டு காலமாக ஒஎஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் பெண்கள் அனைவருமே கதறி அழுது கொண்டிருக்கிறார்கள் என்று கூறி இப்போது ரோஜா நடித்த படத்தின் டிரைலர் மட்டும்தான் ஓடிக் கொண்டிருக்கிறது என்றும், வருங்காலத்தில் ஒரிஜினல் படத்தை காட்டுவோம் என மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Poorni

Recent Posts

திமுக கரை வேட்டி கட்டிக்கிட்டு பொட்டு வைக்காதீங்க.. யாரு சங்கினே தெரியாது : சர்ச்சை கிளப்பிய ஆ. ராசா!

நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…

9 minutes ago

சுரேஷ் கோபியின் பெயர் நீக்கம், 24 கட்… எம்புரான் மறு சென்சாரில் திடீர் மாற்றம்…

சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…

12 minutes ago

சொன்னதை செய்த அண்ணாமலை.. மேலிடம் கொடுத்த ஜாக்பாட் : 9ஆம் தேதி முக்கிய அறிவிப்பு!

தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…

26 minutes ago

கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து ஆணுறுப்பை… மனைவியின் கொடூரம் : ஷாக் வீடியோ!

கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…

2 hours ago

உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…

அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…

2 hours ago

அரசு தீட்டிய திட்டம்.. கைமாறும் 400 ஏக்கர் நிலம் : போராட்டத்தில் குதித்த மாணவர்கள் கைது!

ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…

2 hours ago

This website uses cookies.