சன் டிவி சீரியல் நடிகரின் ஆண் உறுப்பு நீக்கம்.. இந்த நிலைமை யாருக்கும் வரக் கூடாது.. கண்ணீர் பேட்டி..!
Author: Vignesh14 December 2023, 5:25 pm
சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் முக்கியமான ரோலில் நடித்தவர் தான் நடிகர் சக்கரவர்த்தி. சமீபத்தில் இடைப்பால் இனத்தவர் என்ற சான்றிதழை பெற்றிருந்தார். தமிழ் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகர், பின்னணி குரல் கலைஞர், என பன்முக திறமை கொண்டவர் எஸ் ஆர் சக்கரவர்த்தி. இவர் தற்போது சமூகத்தாலும் சக கலைஞர்களாலும், ஒதுக்கி வைக்கப்பட்டு வீட்டில் முடங்கி இருக்கிறார்.
பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சக்கரவர்த்தி ஆரம்பத்தில் இருந்து எனக்கு பல உடல் நிலை பிரச்சனைகள் வந்திருந்தாலும், உடல் ரீதியாகவும், பல துயரங்களை அனுபவித்ததாகவும் சக்கரவர்த்தி அந்த பேட்டியில் தெரிவித்தார். மேலும், ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படும் போது என்ன வலிகள் ஏற்படுமே, அத்தனை வழிகளையும் தான் அனுபவித்ததாகவும், பொதுவாக மாதவிடாய் காலங்களில் பெண்கள் நாப்கினை பயன்படுத்துவது போல் என்னால் அவ்வளவு எளிதாக அதை பயன்படுத்த முடியாது. ஏனென்றால், பெண்களின் பிறப்புறுப்பு அமைப்பிற்கும் ஆண்களின் பிறப்புறுப்பு அமைப்பிற்கும் உள்ள வேற்றுமை அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், எவ்வளவு சிக்கலான முறையில் நான் நாப்கினை பயன்படுத்தி இருப்பேன் என்பதை நினைத்து பாருங்கள் என்று கனத்த குரலில் தெரிவித்தார்.
அதற்காகவே மிகவும் இறுக்கமான உள்ளாடைகளை நான் அணிய வேண்டிய கட்டாயத்திலிருந்ததால் அதன் காரணமாக மாதவிடாய் காலத்திற்குப் பிறகு எனக்கு நிறைய தொற்றுகள் ஏற்பட்டிருக்கின்றன. அதற்கும் தனியாக மருந்துகள் எடுத்துக் கொள்வேன். தூங்கும்போது கூட என்னால் நிம்மதியாக தூங்க முடியாது வயிற்று வலி, கால் வலி, இடுப்பு வலி, முதுகு வலி என அனைத்து இன்னல்களையும் தான் அப்போது அனுபவித்தேன்.
மாதவிடாய் தள்ளிப் போகும் நேரங்களில் எப்போது வேண்டுமானாலும் மாதவிடாய் ஏற்பட்டு விடுமோ என்ற பதட்டத்துடனே தான் இருந்ததாகவும், 38 வயதில் தான் நான் இடை பாலினத்தவர் என்று தெரியவந்தது. இப்போது ஆணுறுப்பு ஆபரேஷன் செய்து அகற்றப்பட்டிருக்கிறது.
அதனால், பல இன்னல்கள் இருக்கிறது. இன்னும் இருக்கும் நாட்களில் நல்லபடியாக வாழ்ந்து விட்டு போக வேண்டும் என்று நினைக்கிறேன். நான் ஆபரேஷன்கள் செய்து கொண்டு இருக்கும் போது எனக்கு தலை முடி, மீசை எல்லாம் உதிர்ந்து போய்விட்டது. அந்த சமயத்தில் நான் வேலை செய்து கொண்டிருந்த டிவி சேனலில் நான் பார்க்க அருவருப்பாக இருக்கிறேன் என்று என்னை அனுப்பினார்கள். இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று சக்கரவர்த்தி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.