பதவி போயும் மவுசு குறையலயே… ரோஜாவிடம் செல்பி எடுக்க முண்டியடித்த பக்தர்கள்!
Author: Udayachandran RadhaKrishnan28 November 2024, 1:18 pm
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகையும் நகரி தொகுதியின் ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி முன்னாள் அமைச்சர் ஆர் கே ரோஜா இன்று சாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.
இதையும் படியுங்க: இந்த வாரம் களைகட்டும் ஓடிடி ரிலீஸ்.. இன்னைக்கு மட்டும் இத்தனை படங்களா?
பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த ரோஜாவை பார்த்த அங்கிருந்த பக்தர்கள் அவருடன் போட்டி போட்டுக் கொண்டு செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

அப்பொழுது ஒரு பெண் திடீரென ரோஜாவே கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நடிகையாக ரோஜாவுக்கு இன்னும் மவுசு குறையவில்லை என அங்கிருந்த பக்தர்கள் பேசிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.