தளபதி 67-ல் மீண்டும் மிரட்டவரும் ‘ரோலெக்ஸ்’ சிறப்பான சம்பவத்தை செய்ய காத்திருக்கும் இயக்குநர் லோகேஷ்..! குஷியில் ரசிகர்கள்..!

Author: Vignesh
7 October 2022, 12:33 pm

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் உலகளவில் வசூலை வாரிக் குவித்தது.

பாக்ஸ் ஆபிஸில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து சொதப்பி வந்த நிலையில் கமலின் விக்ரம் திரைப்படம் தான் அதனை உடைத்து திரையரங்கில் வெற்றிகரமாக மிரட்டி வந்தது. இதனால் சந்தோசத்திலிருந்த கமல் பல்வேறு பரிசுகளைப் படக்குழுவிற்கு வழங்கி படத்தின் வெற்றியைக் கொண்டாடி வந்தார்.

இதனிடையே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 67. இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களால் பொரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜுன், விஜய் சேதுபதி, கவுதம் மேனன், பிரித்விராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கப்போவதாகவும், கோலிவுட் வட்டாரத்தால் பேசப்பட்டு வருகிறது.

படத்தின் கதாநாயகியாக திரிஷா கமிட்டாகி இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. மேலும், மும்பை கேங்ஸ்டர் கதை தான் தளபதி 67 என கோலிவுட் வட்டாரத்தால் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய LCU (Lokesh Cinematic Universe)ல் கொண்டுவரப் போகிறார் என்றும் பேசப்பட்டு வருகிறது. இதன்மூலம் விக்ரம் – கைதி – தளபதி 67 ஆகிய மூன்று படங்களும் ஒன்றிணைய உள்ளதாக ரசிகர்களால் நம்பப்படுகிறது.

கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தில் கடைசி ஐந்து நிமிடங்களில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இந்த கதாபாத்திரம் மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், தளபதி 67 படத்திலும் திரையரங்கை அதிரவைத்த ரோலெக்ஸ் கதாபாத்திரம் இடம்பெறும் என்றும் நம்பக தகுந்த வட்டாரத்தால் தகவல் வெளியாகியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 740

    0

    1