இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் உலகளவில் வசூலை வாரிக் குவித்தது.
பாக்ஸ் ஆபிஸில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து சொதப்பி வந்த நிலையில் கமலின் விக்ரம் திரைப்படம் தான் அதனை உடைத்து திரையரங்கில் வெற்றிகரமாக மிரட்டி வந்தது. இதனால் சந்தோசத்திலிருந்த கமல் பல்வேறு பரிசுகளைப் படக்குழுவிற்கு வழங்கி படத்தின் வெற்றியைக் கொண்டாடி வந்தார்.
இதனிடையே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 67. இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களால் பொரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜுன், விஜய் சேதுபதி, கவுதம் மேனன், பிரித்விராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கப்போவதாகவும், கோலிவுட் வட்டாரத்தால் பேசப்பட்டு வருகிறது.
படத்தின் கதாநாயகியாக திரிஷா கமிட்டாகி இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. மேலும், மும்பை கேங்ஸ்டர் கதை தான் தளபதி 67 என கோலிவுட் வட்டாரத்தால் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய LCU (Lokesh Cinematic Universe)ல் கொண்டுவரப் போகிறார் என்றும் பேசப்பட்டு வருகிறது. இதன்மூலம் விக்ரம் – கைதி – தளபதி 67 ஆகிய மூன்று படங்களும் ஒன்றிணைய உள்ளதாக ரசிகர்களால் நம்பப்படுகிறது.
கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தில் கடைசி ஐந்து நிமிடங்களில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இந்த கதாபாத்திரம் மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், தளபதி 67 படத்திலும் திரையரங்கை அதிரவைத்த ரோலெக்ஸ் கதாபாத்திரம் இடம்பெறும் என்றும் நம்பக தகுந்த வட்டாரத்தால் தகவல் வெளியாகியுள்ளது.
இனி AI யுகம்… Artificial Intelligence எனப்படும் AI தொழில்நுட்பம் இனி வரும் காலங்களில் மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை…
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நித்தியானந்தா கர்நாடகாவில் தனக்கென தனி சீடர் கூட்டத்தை உருவாக்கி ஒரு ஆசிரமத்தை எழுப்பினார். ஆன்மீக சொற்பொழிவாற்றி…
யூட்யூப் பிரபலம் Food Vlogger இர்ஃபானை தெரியாத நபர்களே இருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு இணையவாசிகளின் மத்தியில் மிகப் பிரபலமான யூட்யூபராக வலம்…
குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ பணிகளுக்கான தேர்வு பற்றி அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. குரூப் 1 தேர்வுக்கு…
தங்கம் என்ற சொல்லை உதட்டளவு இனி உச்சரிக்கத்தான் முடியும் என்பது போல தினமும் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை…
This website uses cookies.