சாதனை மேல் சாதனை செய்யும் RRR திரைப்படம் : இதுவரை உலகம் முழுவதும் இத்தனை கோடிகள் வசூலா..?

Author: Rajesh
2 April 2022, 11:59 am

பாகுபலி திரைப்படத்தின் மூலம் பிரமாண்ட இயக்குனர் உலக அளவில் பிரபலமானவர் தான் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இதனையடுத்து வெளியான ‘பாகுபலி 2’ திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் கொடி கட்டிப் பறக்கும் அளவுக்கு இப்படம் பலமான வியாபாரம் செய்தது.

தற்போது மீண்டும் அவரின் சாதனையை அவரே முறியடிக்க தொடங்கியுள்ளார். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆலியா பட், அஜய் தேவ்கன், நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் ‘ஆர்ஆர்ஆர்’. இந்த திரைபடத்தினை காண மக்கள் மிகுந்த ஆர்வத்தில் இருந்த நிலையில், இந்தப் படத்தின் முன்பதிவு மார்ச் 22 ஆம் தேதியை தொடங்கியது.

இந்த வருடத்தின் மிகப்பெரிய படமாக கருதப்படுகிறது. மேலும் இந்த படத்தின் முதல் நாள் வசூல் 100 கோடி என தகவல் வெளியானது. இந்த வசூல் இந்தியா சினிமா வரலாற்றிலேயே ஒரு படம் முதல் நாளில் அதிக வசூல் செய்ததுள்ளது என்ற தகவல் வெளியானது.

இதன் வாயிலாக, தனது படம் மட்டுமல்ல; தனது படத்தின் பிஸினஸும் பிரம்மாண்டம் தான் என நிருபித்தார் இயக்குநர் ராஜமெளலி. சென்னையில் மட்டும் ரூ. 10 கோடிக்கும் மேலாக RRR திரைப்படம் வசூலித்திருக்கிறது. அதோடு உலகம் முழுவதும் இதுவரையிலான வசூல் ரூ. 750 கோடிக்கு மேல் என்கின்றனர். பாகுபலி பட மொத்த வசூலை முறியடித்த ஆர்ஆர்ஆர் இப்போது 2.0 படத்தின் மொத்த வசூல் சாதனையையும் முறிடியத்துள்ளது. 2.0 படம் ரூ. 650 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Game Changer trailer release ராம் சரண் இத்தன கெட்டப்பா…பிரம்மாண்டமாக வெளிவந்த கேம் சேஞ்சர் ட்ரைலர்..!
  • Views: - 1547

    0

    0