ப்ளு சட்டை மாறனுக்கு ரூ.1 கோடி லஞ்சம்? வாரிசு படம் சூப்பர்னு சொல்லுங்க.. என்ன கொடுமையா இருக்கு!!!
Author: Udayachandran RadhaKrishnan9 January 2023, 3:02 pm
இணையப் பக்கங்களில் அஜீத் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே அவ்வப்போது பனிப்போர் நடப்பது வழக்கம். வாரிசு படத்தின் ட்ரெய்லர் சாதனை பாட்ஸ் வைத்து எடுக்கப்பட்டது என அஜித் ரசிகர்கள் மீம்களை பறக்க விட்டு வந்தனர்.
மட்டுமில்லாமல் வாரிசு படத்திற்கு பாசிடிவ் விமர்சனம் கொடுக்க வேண்டுமென்று ப்ளூ சட்டை மாறன் மற்றும் இட்ஸ் பிரசாந்த் ஆகியோருக்கு வாரிசு படக்குழு சார்பாக தலா ஒரு கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது என உருட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் சில இணையவாசிகள்.
ஒருபக்கம் இரண்டு திரைப்படங்களின் படங்களின் டிரைலரை பார்த்து விட்டு வாரிசு திரைப்படமா..? துணிவு திரைப்படமா…? எது வெற்றிப்படம் என்று விவாதம்.. மருப்பக்ம், படம் வெளியான பிறகுதான் தெரியும் என்று இணையவாசிகள் விவாதம்.. என கடந்த சில வாரங்களாக ஒட்டு மொத்த சமூக வலைதளங்களுமே பரபரப்பாக இயங்கி வரும் நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களும் வேறுவேறு கதைக்களம் மற்றும் கதையம்சம் கொண்டவை.
வீரம் மற்றும் ஜில்லா என இரண்டு திரைப்படங்களும் ஒரே மாதிரியான குடும்பம் சார்ந்த படங்களாக இருந்தன. ஆனால் தற்போது வெளியாக உள்ள துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் வேறு வேறு கதை அம்சங்கள் கொண்டது.
துணிவு திரைப்படம் ஒரு பேங்கை கொள்ளையடிக்கும் கதைக்களமாக உருவாகி இருக்கிறது மறுபக்கம் வாரிசு திரைப்படம் குடும்பம் சார்ந்த தன்னுடைய தந்தையை கொலை செய்த நபரின் பழிவாங்கும் கதை என்பது போல இருக்கிறது.
இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் எப்படி வரவேற்பு வரப்போகிறது என்பதை பார்த்து விடலாம். ஆனால் மறுபக்கம் வாரிசு படக்குழு மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் ப்ளூ சட்டை மாறனுக்கு ஒரு கோடியும்.. இட்ஸ் பிரசாந்துக்கு ஒரு கோடியும் கொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்நிலையில் இது குறித்து அறிந்த ப்ளூ சட்டை மாறன் 500 ரூபாய் கூட இந்த அஞ்சு பைசா கூட தரமுடியாது நினைக்கும்போது டா தம்பி என்று நடிகர் வடிவேலுவின் ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார்.
அதனை தொடர்ந்து இட்ஸ் பிரசாந்த் பதிவு செய்துள்ள பதிவில் யார் கொடுக்கிறார்கள் சொல்லுங்க நான் முதல்ல போய் வாங்கி வரேன்.. என் பெயரை சொல்லி சொல்லி வேற எவனாவது வாங்கிட்டு போக போகிறான் என்று தனக்கே உரிய பாணியில் பதிலடி கொடுத்திருக்கிறார்.
இப்படியாக கூத்துக்களை இணையத்தில் பார்க்கும்போது அடக்கமுடியாமல் சிரிப்புதான் வருகிறது. இன்றைக்கு சினிமா வெற்றி பெறுவதில் விமர்சகர்களின் பங்கு அதிகம் இருக்கிறது என்று ஒப்புக் கொண்டாலும் கூட சினிமா விமர்சனத்திற்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறார்கள் என்று கூறுவதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
ஏனென்றால் விமர்சகர்களை மட்டுமே நம்பி திரைப்படங்களின் வெற்றி தோல்விகளை ரசிகர்கள் முடிவு செய்வது கிடையாது. புதுமுகங்களின் நடிப்பில் வெளியான நல்ல திரைப்படம் என்றால் எந்த விமர்சனமும் இல்லாமல் அந்த திரைப்படம் தானாக விளம்பரப்படுத்திக் கொள்ளும்.
பெரிய நடிகரின் படம்.. ஆனால் படம் நன்றாக இல்லை என்றால் என்ன விளம்பரம் படுத்தினாலும் அந்த படம் ஓடாது இது நாம் காலம் காலமாக பார்க்கக் கூடிய ஒரு விஷயம்.
அப்படி இருக்கும்போது விமர்சகர்களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறார்கள் என்றால் வியப்பாக இருக்கிறது சிரிப்பாகவும் இருக்கிறது.