1 நிமிடம் நடனமாட ரூ.10 கோடி சம்பளம் : பிரபல நடிகரின் வீடியோ இணையத்தில் வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2023, 3:38 pm

1 நிமிடம் நடனமாட ரூ.10 கோடி சம்பளம் : பிரபல நடிகரின் வீடியோ இணையத்தில் வைரல்!!

முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானிக்கு சொந்தமான கலாச்சார மையத்தில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் நடனமாட பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால் அந்த கலை நிகழ்ச்சியில் நடனமாட பல கோடி சம்பளத்தை ஷாருக்கான் பெற்றுள்ளார். அதாவது, அந்த நிகழ்ச்சியில் ஒரு நிமிடம் மட்டுமே மேடையில் தோன்றுகிறார். அதற்காக அவர் ரூ.10 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.

இந்த தகவலை பிரபல வெளிநாட்டு தணிக்கை குழு உறுப்பினரும், சினிமா விமர்சகருமான உமைர் சந்து என்பவர் தனது ட்விட்டரில் பதிவிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து வெளியான டைம் இதழ் 2023-ம் ஆண்டின் செல்வாக்குமிக்க டாப் 100 நபர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 474

    0

    0