பாலிவுட் சினிமாவின் ஆபாச நடிகையாக பிரபலமாகியிருப்பவர் நடிகை பூனம் பாண்டே. மாடல் அழகியான இவர் 2013-ஆம் ஆண்டு ‘நஷா’ எனும் படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார். பின்னர், “லவ் இஸ் பாய்சன்” எனும் கன்னட படத்திலும், “மாலினி அண்ட் கோ” எனும் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.
தான் நடிக்கும் படங்களில் இயக்குனர் கேட்பதற்கு இரண்டு மடங்காக கவர்ச்சி தூக்கி காட்டி நடித்து ஆபாச நடிகை போல் ரசிகர்களால் பார்க்கப்பட்டார். சினிமாவை தாண்டி இவர் ‘பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். சமூகவலைத்தளங்களில் எப்போதும் படு மோசமான கவர்ச்சி, மற்றும் அரைநிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு அதிர வைப்பார்.
அதுமட்டும் இன்றி சர்ச்சைக்குரிய வகையில் எதையேனும் கூறி எல்லோரையும் அதிர வைப்பார். அப்படித்தான் 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனிடையே இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு தன் காதலர் சாம் பாம்பேவை திருமணம் செய்துகொண்டு ஒரு மாதத்திலேயே தன் கணவர் தன்னை அடித்து துன்புறுத்தி வன்முறை செய்ததாக கூறி பிரிந்துவிட்டார்.
தொடர்ந்து சர்ச்சை கிளப்பும் வகையில் எதையேனும் செய்து மக்கள் கவனத்தை தன் பக்கம் திசைதிருப்ப பார்க்கும் நடிகை பூனம் பாண்டே சமீபத்தில் கருப்பை வாய் புற்றுநோய் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதையடுத்து தான் உயிரோடு இருப்பதாக அவர் தகவல் தெரிவித்தார்.
இதை கேட்டு பெரும் குழப்பத்திற்கு ஆளான தன் ரசிகர்களுக்கு, ‘கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் ஏராளமான பெண்கள் துரதிஷ்டவசமாக உயிரிழக்கிறார்கள். எனவே இது முற்றிலும் தடுக்கப்படக்கூடிய ஒரு நோய். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட விழிப்புணர்வு விளம்பரம் தான் என் மரணச்செய்தி என கூறியிருந்தார். அதுக்காக இப்படியா விளம்பரம் செய்வது என பலர் அவரை திட்டித்தீர்த்தனர்.
அதன் பின் மராட்டிய சட்டமன்ற மேலவை உறுப்பினர் சத்யஜீத் தாம்பே, பூனம் பாண்டே மீது வழக்குப்பதிவு செய்து, பொதுமக்களுக்கு தேவையற்ற பீதியையும், மன உளைச்சலையும் குழப்பத்தையும் ஏற்படுத்திய பூனம் பாண்டே மீது தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 67-ன் கீழ் மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கொடுக்கவேண்டும் என கூறியுள்ளார். மேலும், விளம்பரத்துக்காக இதுபோன்று நடந்துகொள்பவர்களுக்கு சரியான பாடம் கற்பிப்பது போல சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது ஃபைசன் அன்சாரி என்பவர் பூனம் பாண்டேவுக்கு எதிராக எஃப்ஐஆர் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அதில் பூனம் பாண்டே மற்றும் அவரை பிரிந்து இருக்கும் கணவர் சாம் பாம்பே இருவரும் தான் சேர்த்துக்கொண்டு தான் இந்த மரண டிராமாவை போட்டுள்ளனர்.புற்றுநோய் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை சிறுமைப்படுத்தும் விதமாக தனது சொந்த லாபத்துக்காக டெத் ட்ராமா போட்ட தண்டனைக்காக ரூ.100 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். எனவே விரைவில் பூனம் பாண்டே கைது செய்யப்படுவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. விளையாட்டாக செய்த இந்த பிரச்சனையில் இருந்து எப்படி வெளிவருவது என தெரியாமல் பூனம் பாண்டே பயத்தில் நடுங்கி போய்கிடக்கிறாராம்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.