ரூ.300 கோடி ப்பே… சொன்னதெல்லாம் பீலாவா? வாரிசு படத்தால் தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்!!
Author: Udayachandran RadhaKrishnan15 February 2023, 4:32 pm
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங், வசூல் சக்கரவர்த்தி என அழைக்கப்படுவது நடிகர் விஜய்யை தான். இவர் படம் எப்போதும் அதிக வசூலை பெறும் என்பது தயாரிப்பாளர்களின் அதீத நம்பிக்கை.
அந்த வகையில் சமீபத்தில் வளியான வாரிசு படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக்குழுவே அறிவித்தது.
ஆனால் அதெல்லாம் பொய் என விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வாரிசு படம் வெளியாகி 100 கோடி வசூல் செய்யும் என்றும் இதனால் 50 கோடி ஷேர் கிடைக்கும் என கணக்கு போட்டிருந்தாராம்.
ஆனால் அந்த பகுதியில் வெறும் 13 கோடி ரூபாய் மட்டும் ஷேர் கிடைத்துள்ளதாம். மேலும் தமிழ் நாட்டு வெளியீட்டு உரிமையை லலித், வாரிசு படத்தினை 60 கோடிக்கு வாங்கி 67 கோடியில் 7 கோடி ஷேர் ஆக பெற்றுள்ளார் என கூறப்படுகிறது
விளம்பரம் பிரமோஷனுக்காக 5 கோடி செலவு செய்துவிட்டதால் முழு பணத்தை ஷேராக பெறவில்லையாம் லலித்.விஜய்யின் மார்க்கெட் இப்படியொரு சரிவை சந்தித்ததால் தயாரிப்பாளருக்கு தலையில் துண்டைப்போடும் நிலைக்கு தள்ளியுள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக அஜித்தின் துணிவு திரைப்படம் ஒன்றாக சேர்ந்து வெளியாது தான் என கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.