ரூ. 41 லட்சம் மோசடி… நடிகை நமீதாவின் கணவர் அதிரடி கைது?

Author: Shree
14 November 2023, 6:29 pm

கவர்ச்சி நடிகையான நமீதா தமிழ் ,தெலுங்கு , கன்னடம் ,ஹிந்தி மொழிப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் “எங்கள் அண்ணா” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தமிழில் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடிக்க தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரத்துடங்கினார்.

ஆம், நடிகை நமீதாவுக்கு தமிழ்நாட்டில் ரசிகர் ஒருவர் கோவிலே கட்டி உள்ளார். தமிழில் டாப் நடிகையாக இருந்த நமீதாவுக்கு படங்களுக்கு படம் உடல் எடை கூடிக்கொண்டே போக . மெல்ல மெல்ல மார்க்கெட்டை இழந்தார். இதனால் இடையில் கொஞ்ச காலம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்ட நடிகை நமீதா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் Re -Entry கொடுத்தார். அதே ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான வீரேந்திர சவுத்திரியை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

திருமணத்துக்குப் பிறகு முக்கியமான கதாபாத்திரங்கள் கொண்ட படத்தை மட்டுமே அவர் தேர்வு செய்து நடித்து வந்தார். ஜீ தமிழிலில் ஒளிபரப்பாகி வரும் ‘புதுப்புது அர்த்தங்கள்’ சீரியலில் நடிகை நமீதா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் புதிதாக “நமிதா தியேட்டர்ஸ்” என்ற ஓடிடி தளம் ஒன்றையும் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி MSME என்ற ப்ரோமோஷன் கவுன்சில் என்ற அமைப்பின் தமிழ்நாடு தலைவராக இருக்கிறார். அந்த நிறுவனத்திடம் ரூ. 41 லட்சம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன்பின் நடிகை நமீதாவின் கணவர் விசாரணைக்கு ஆஜராகும்படி கூறியும் தற்போது வரை ஆஜராகததால் விரைவில் அவரை போலீசார் கைது செய்ய உள்ளதாக தகவல்கள் கூறுகிறது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 490

    0

    0