சென்னையில் பரபரப்பு.. பிரபல நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த போலீசார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

சென்னை: நடிகர் விஜய் போக்குவரத்து விதிகளை மீறி தனது காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதாக கூறி அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.

நடிகர் விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து முன்னணி தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து இருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

வாரிசு இதன் படப்பிடிப்பு ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று உள்ளது. இப்படத்துக்கு தமன் இசையமைத்து இருக்கிறார். இதன் முதல் சிங்கில் பாடலான ரஞ்சிதமே கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வாரிசு படம் பொங்கலை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

தெலுங்கில் சிக்கல் பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சியால் இயக்கி, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜால் தயாரித்த இப்படம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வரசுடு என்ற பெயரில் வெளியாக உள்ளது. ஆனால் அங்கு மகா சங்கராந்தியாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேரடி தெலுங்கு படங்கள் மட்டுமே வெளியிட வேண்டும் என அம்மாநில தயாரிப்பாளர்கள் சங்கம் திரையரங்குகளுக்கு அறிவுறுத்தியது.

மக்கள் இயக்க கூட்டம் இதற்கு சீமான், வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், தமிழ் சினிமா இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டார்.

ரசிகர்களுடன் ஆலோசனை 5 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னை பனையூரில் உள்ள மக்கள் இயக்க அலுவலகத்தில் தனது ரசிகர்களை சந்தித்த அவர், நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

இப்போது அவர் ரசிகர்களுடன் புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டார். இன்னோவா கார் இந்த சந்திப்பில் கலந்துகொள்ள பனையூர் அலுவலகத்திற்கு நடிகர் விஜய் வருகை தந்தவுடன் அவரது கார் அருகே ரசிகர்கள் ஓடிச்சென்று கைகொடுக்கவும், செல்பி எடுக்கவும் முயன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகின.
அதில் விஜய் வந்திருந்த டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. போலீசிடம் புகார் அதுதான் தற்போது விஜய்க்கு சிக்கலாகி இருக்கிறது. கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது போக்குவரத்து விதிகளுக்கு எதிரானது என்று சமூக வலைதளங்களில் பலர் குற்றம்சாட்டினர்.

அந்த வீடியோவை சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு டேக் செய்து இதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு சிலர் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி இருந்தனர். ரூ.500 அபராதம் இந்த நிலையில் காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது போக்குவரத்து விதியை மீறும் செயல் என்பதால், வழக்குப்பதிவு செய்த சென்னை போக்குவரத்து காவல்துறையினர், நடிகர் விஜய் போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக விளக்கமளித்து இருக்கின்றனர்.

Poorni

Recent Posts

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

27 minutes ago

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் முதல் காட்சி வெளிவராது- விநியோகஸ்தர்கள் திட்டவட்டம்

தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

1 hour ago

அமைச்சரின் சகோதரர் கொலை வழக்கில் போலி என்கவுண்டர் நடத்த பிளான் : சீமான் பகீர் குற்றச்சாட்டு!

திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…

3 hours ago

மகன் தீ விபத்தில் சிக்கியதை அறிந்தும் மக்களை சந்தித்த துணை முதல்வர்.. நெகிழ வைத்த பவன் கல்யாண்!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…

3 hours ago

வாரணம் ஆயிரம் படத்தில் அசின்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் திரைப்படம் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்” திரைப்படத்தை 90களில் பிறந்தவர்களால் மறக்கவே…

4 hours ago

This website uses cookies.