விஜய்-சங்கீதா விவாகரத்து.. வெளிப்படையாக கூறிய விஜய்யின் நட்பு வட்டாரங்கள்..!

Author: Vignesh
21 April 2023, 1:30 pm

இணையத்தில் சமீப நாட்களாக தீயாய் பரவிக் கொண்டிருக்கும் செய்திதான் விஜய் தனது மனைவி சங்கீதாவை பிரிந்து வாழ்கிறார் என்று.

நடிகர் விஜய்க்கும் அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் சங்கீதா வெளிநாட்டில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு மகன் மற்றும் மகளுடன் சென்றுவிட்டார் என்றும் தகவல் வெளியாகி சோசியல் மீடியாவை பதம் பார்த்தது.

அதுமட்டுமல்லாமல், நடிகையின் மேல் உள்ள காதல்தான் காரணம் என்றும், அந்த நடிகையுடன் விஜய்க்கு தவறான உறவு உள்ளது என்றும், இதை அறிந்து தான் சங்கீதா சென்று விட்டதாக சர்ச்சைக்குரிய தகவல் பரவியது.

இதனிடையே, தற்போது விஜய் பற்றிய பல தகவல்கள் அதிகம் வைரலாகி வந்துக் கொண்டிருக்கின்றது. முதன் முதலாக தந்தையுடன் வாக்குவாதம் ஏற்பட்டு தந்தையை கண்டுக் கொள்ளாமல் இருப்பதாகவும் பிறகு விஜய் வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் இதனால் சங்கீதா அவரை விவாகரத்து செய்யவுள்ளதாகவும் தகவல்கள் நாளுக்கு நாள் பரவி வந்துக் கொண்டு இருக்கிறது.

இதனிடையே, விஜய்க்கும் தன்னுடைய மனைவி சங்கீதாவிற்கும் நடுவில் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்தில் முடிய போவதாக பத்திரிகைகளில் வெளிவந்தது.

இந்நிலையில் விஜய்-சங்கீதா இடையே பிரச்சனை எதுவும் இல்லை எனவும், அவர்கள் இருவருமே மொபைல் போனில் பேசி வருவதாக விஜய்யின் நட்பு வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். சில மாதங்களாக விஜய்-சங்கீதா விவாகரத்து வந்தந்திக்கு விஜய்யின் நட்பு வட்டாரங்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!