அடித்து அசிங்கமா திட்டிய விஜய் அப்பா… புலம்பி அழுத ஷங்கர் – அதிர்ச்சி கொடுக்கும் பிளாஷ்பேக் சம்பவம்!

Author: Shree
24 August 2023, 4:08 pm

இந்தியாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் தான் இயக்குநர் ஷங்கர். பிரமாண்டம், அதிநவீன தொழில்நுட்பம், பலகோடி பட்ஜெட் என்றாலே கண் இமைக்கும் நேரத்தில் அனைவரது நினைவுக்கு வருபவர் இயக்குனர் சங்கர் தான்.

இன்றைய சமூகத்தில், இப்படியொரு மாற்றம் நிகழ்ந்து விடாதா? என்று கற்பனைக்கு எட்டாத கதைகளை தேர்வு செய்து, அதற்கு ஏற்ற கதாநாயகர்களை தன் படங்களில் நடக்க வைத்து வெற்றிப்படங்களை அள்ளிக் கொடுத்தவர். இதனாலேயே, இயக்குநர் சங்கர் தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநராகவும் இருந்து வருகிறார்.

தொழில்நுட்ப அருமை, பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களுக்காகப் பேசும் படங்களை பெரும் பொருட்செலவில் எடுத்து தயாரிப்பளர்கள் நஷ்டம் அடையாதவாறு பல மடங்கு லாபத்தை சம்பாதித்து கொடுத்தவர் ஷங்கர். இவர் சொந்தமாக எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இன்றைய டாப் இயக்குனர்களாக இருக்கும் அட்லீ உள்ளிட்ட இயக்குனர்கள் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி தொழில் நுணுக்கங்களை கற்றுத்தெரிந்தவர்கள் தான். ஆனால், ஷங்கர் உதவி இயக்குனராக பணியாற்றியது விஜய்யின் அப்பாவான எஸ். ஏ சந்திர சேகரிடம் தான். இந்நிலையில் ஷங்கர் உதவி இயக்குனராக அவரிடம் பணியாற்றியபோது பலமுறை அடி வாங்கி, திட்டு வாங்கி, பலர் முன்னிலையில் அவமானப்பட்டு தான் தொழிலை கற்றுக்கொண்டாராம்.

இதனை ஜெண்டில்மேன் படத்தில் போலிஸாக நடித்த நடிகர் சரண்ராஜிடம் ஷங்கர் கூறி புலம்பியிருக்கிறாராம். இன்றைய இயக்குனர் ஜாம்பவானாக இருந்து வரும் ஷங்கரின் இந்த பிளாஷ்பேக் சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 285

    0

    0