மகனுக்காக பிரபல நடிகரின் கெரியரை காலி செய்ய பார்த்த SAC – உஷாரா தப்பித்த சாக்லேட் பாய்!

Author: Shree
26 August 2023, 1:16 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய் ஆரம்பத்தில் தனது அப்பாவின் உதவியால் இந்த உயரத்தை எட்ட முடிந்தது. விஜய்க்கு ஆரம்பத்தில் அவர் தான் கதைத்தேர்வு செய்வராம். இந்த கதை ஓகே என்றால் அதில் நடிப்பாராம் விஜய். அந்த அளவிற்கு விஜய்யை பார்த்து பார்த்து சினிமாவில் நடிக்க வைத்து உச்சத்தை தொட வைத்துள்ளார் அப்பா SAC.

விஜய்யின் வெற்றிக்காக என்னவேண்டுமானாலும் செய்ய துணிந்தாராம். விஜய்க்கு பாரதிராஜா போன்ற பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு வீட்டு வாசலில் காத்துக்கிடந்த சம்பவமெல்லாம் நடந்துள்ளது. இயக்குனர் ஷங்கரிடம் கூட மகனுக்கு நல்ல வாய்ப்பு ஒன்னு கொடுங்க என கேட்டுள்ளார்.
அப்போதெல்லாம் தானே ஒரு இயக்குனர் என்றாலும் கூட பெரிய இயக்குநர்களின் படங்களில் மட்டும் மகனை நடிக்க வைக்க மிகவும் கஷ்டப்பட்டாராம்.

அதுமட்டும் அல்லாமல் மகனின் சினிமா தொழிலுக்கு தடங்கலாக இருக்கும் அஜித், மாதவன் போன்ற நடிகர்களை உள்ள புகுந்து திட்டமிட்டும் கெடுக்க பார்த்தாராம். ஆம், 2000ம் முதலில் விஜய்க்கு பெரும் போட்டியாக இருந்த நடிகர் மாதவனின் கெரியரை காலி செய்ய ஒரு மொக்கையான கதையை கொண்டுச்சென்று அதில் நடிக்க சொல்லி வற்புறுத்தினராம். மாதவனுக்கு அந்த கதை சுத்தமாக பிடிக்காததால் மறுத்துவிட்டாராம்.

அப்படியும் விடாமல் தொடர்ந்து வறுபுறுத்தியதால் சரி நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டு தன் மேனேஜரிடம் கூறினாராம். அதற்கு மாதவனின் மேனேஜர் வேண்டாவே வேண்டாம் சார்… இந்த படத்துல நடிசீங்கன்னா உங்க கெரியர் க்ளோஸ் ஆகிடும். அவரது மகனின் வளர்ச்சிக்கு தடங்கலாக இருக்கும் உங்களை எப்படியாவது காலி செய்யவேண்டும் என திட்டமிட்டு தான் இப்படியெல்லாம் கேட்கிறார் தயவு செய்து ஒப்புக்கொள்ளாதீர்கள் என சொல்லிவிட்டாராம். இதை கேட்டு உஷாரான நடிகர் மாதவன் SAC யிடம் நான் வேறொரு படத்தில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறேன் அதனால் வேண்டாம் என நைசா கூறிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டராம்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 609

    1

    0