“அப்பனே மகனுக்கு மாமா வேலை பாக்குறான்னு” சொன்னாங்க… வேதனையில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்..! (வீடியோ)

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பல முகங்களை கொண்டு விளங்கி வருபவர் எஸ்.ஏ. சந்திரசேகர். கோலிவுட்டில் அவர் ஒரு பச்சை குழந்தை என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். சட்டம் ஒரு இருட்டறை என்னும் திரைப்படம் தான் இவரை பிரபலம் அடைய வைத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 70திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

மேலும், தனது மகனும் பிரபல நடிகருமான தளபதி விஜய் அவர்களை அறிமுகம் செய்து வைத்ததும் இவர் தான். சந்திரசேகர் அவர்கள் இயக்கிய படங்கள் மூலமாக மக்களுக்கு நிறைய நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார். புரட்சி இயக்குனர் என அழைக்கப்படும் அளவிற்கு அவர் எடுத்த பெரும்பாலான படங்கள் சட்டம் சார்ந்தவையாகவும், புரட்சிக் கருத்துக்களை அடிப்படையாக கொண்டும் அமைந்திருக்கும். விஜயகாந்தை வைத்து தான் அதிகமான படங்களை இயக்கியுள்ளார்.

தளபதியின் இந்த உச்சத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது விஜயின் தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் தான். அந்த அளவிற்கு ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் தளபதி விஜய்யை வைத்து 7 படங்களை கொடுத்து எடுத்து தூக்கிவிட்டார்.

பல கஷ்டங்களில் இருந்தாலும் கூட விஜய்க்கு பக்க பலமாக இருந்த எஸ் ஏ சி-க்கும், விஜய்க்கும் இடையில் தற்போது சண்டை இருந்து வருவதாக கூறப்படுகிறது. விஜய் இந்த பிரச்சனையை கண்டுகொள்ளவில்லை என்றாலும் விமர்சனங்களும் அவ்வப்போது எழுந்து வந்தது. ஆனால் தங்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பது உண்மை தான் என எஸ் ஏ சந்திரசேகர் கூறியுள்ளார்.

சமீபத்திய பேட்டியொன்றில் விஜயை எங்கும் விட்டுக்கொடுக்கவில்லை என்று எஸ் ஏ சி கூறியுள்ளார். இதனிடையே, சித்ரா லட்சுமணனின் யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கொடுத்த எஸ் ஏ சி, விஜய் குறித்த பல உண்மைகளை ஓப்பனாக கூறியுள்ளார்.

அதில் சித்ரா லட்சுமணன் உங்கள் மகன் விஜய் நடித்த படத்தில் எந்த படம் கவர்ந்தது என்ற கேள்வி கேட்டார். அதற்கு எஸ்ஏசி, எனக்கு எப்பவும் ரசிகன் தான். ஃபுல் எண்டர்ரெண்ட் படமாக விஜய்யின் வாழ்க்கையை மாற்றியது அதனால் எனக்கு பிடிக்கும் என தெரிவித்தார்.

ரசிகன் படத்தினால் பலர் திட்டியும் விமர்சித்தும் இருந்தனர். படத்தில் விஜய் பல கிளாமர் காட்சியில் நடிகையுடன் நடித்திருப்பதால், என்னை, அப்பனே மகனுக்கு மாமா வேலை பார்க்கிறான் என்று சிலர் திட்டினார்கள் என்று எஸ்ஏசி தெரிவித்தார்.

Poorni

Recent Posts

அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்ததரவு!

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

13 minutes ago

திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு… கொந்தளித்த கனிமொழி எம்பி : என்ன நடந்தது?

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

33 minutes ago

அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…

13 hours ago

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

15 hours ago

ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்

ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…

16 hours ago

கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?

வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…

17 hours ago

This website uses cookies.