ஏன் அஜித் மாதிரி நான் மாறக்கூடாதா? விஜய்யின் தந்தை செய்த செயல்.. வைரலாகும் புகைப்படம்..!!

Author: Vignesh
2 November 2022, 7:00 pm

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி வெற்றி கண்டவர் எஸ்.ஏ. சந்திரசேகர். தற்போது உச்ச நட்சத்திரமாக திகழும் விஜய்யின் வெற்றிக்கு அடித்தளமிட்டவரும் அவரின் தந்தையான இவரே. தற்போது தனது தந்தை மீதுள்ள கோபத்தால் அவருடன் பேசாமல் இருக்கிறார் விஜய்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் தற்போது யார் இந்த எஸ்ஏசி என்ற பெயரில் யூடிப் சேனல் ஒன்றை துவக்கி தனது திரையுலக பயணம் குறித்து பேசி வருகிறார்.

s a chandrasekhar - updatenews360

அண்மையில் எஸ்.ஏ. சந்திரசேகர் பிறந்தநாள் கொண்டாடிய போது தனது மனைவி ஷோபா மற்றும் உதவியாளர்களுடன் கேக் வெட்டினார். அதனை தொடர்ந்து அவருக்கு நடந்த சதாபிஷேகம் நிகழ்விலும் விஜய் கலந்து கொள்ளவில்லை. இது பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

s a chandrasekhar - updatenews360

இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய எஸ்.ஏ. சந்திரசேகர் தந்தை மகன் இடையில் ஆயிரம் இருக்கும். கோயிலில் என்னை பார்க்கவே பலர் கூடிவிட்டனர். இதில் விஜய்யும் இருந்திருந்தால், அவரை பார்க்க எந்தளவிற்கு கூட்டம் கூடி இருக்கும் எனக்கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இமயமலை சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

s a chandrasekhar - updatenews360

ராயல் என்ஃபீல்டு பைக்கில் அமர்ந்து மாஸாக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நம்ம தளபதி அப்பாவா என ஆச்சரியத்துடன் கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் சிலர் அஜித் வழியில் பைக் ட்ரிப் கிளம்பியாச்சா என கிண்டலுடன் கமெண்ட் அடித்து வருகின்றனர். எஸ்.ஏ.சி. தற்போது ‘நான் கடவுள் இல்லை’ என்ற படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 511

    0

    0