விஜயகாந்த் மரணத்திற்கு இதுதான் காரணம்? சந்தேகம் எழுப்பிய SA சந்திரசேகர்..!

Author: Vignesh
9 January 2024, 12:15 pm

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். பின்னர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அடுத்த மறுநாள் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

vijayakanth-updatenews360

இதைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செய்து அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள். தொடர்ந்து விஜயகாந்த் செய்த பல்வேறு நற்பணிகள், ஏழை எளிய மக்களுக்கு உதவிகள், திரைதுரைசேர்ந்த பலருக்கு வாழ்வளித்தது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், துபாயில் இருந்து இரங்கலை தெரிவித்து அங்கிருந்தபடியே வீடியோ வாயிலாக SA சந்திரசேகர் பகிர்ந்து கொண்டார். இதனை அடுத்து, சமீபத்தில் சென்னை திரும்பிய எஸ்ஏ சந்திரசேகர் விஜயகாந்த் சமாதிக்கு நேரில் சென்று, மரியாதை செலுத்தியதுடன் விஜயகாந்த் பற்றிய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.

vijayakanth sac

உறவு என்பது சாதாரணமானது அல்ல ஒரு நடிகருக்கும் இயக்குனருக்கும் இடையே உள்ள உறவை தாண்டி என்னுடைய தம்பியாக தான் அவரை பார்க்கிறேன். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் விஜயகாந்தை அவரது வீட்டில் சந்தித்தேன். அப்போது, கஷ்டப்பட்டு எழுந்திருக்க முயற்சி செய்த அவரை நான் குனிந்து கட்டியணைத்துக் கொண்டேன்.

vijayakanth

விஜயகாந்த் அரசியலில் மிகப்பெரிய இடத்திற்கு செல்வார் என்று நான் கணக்கு போட்டேன். மூன்றாவது தேர்தல் வரும்போது அவர் முதல்வர் ஆகிடுவார் என்று நம்பினேன் என தெரிவித்துள்ளார். மேலும், 2017 ஆம் ஆண்டு என நினைக்கிறேன் விஜயகாந்த்துக்கு மிகப்பெரிய அறுவை சிகிச்சை ஒன்று நடந்தது. அதற்கு பிறகு, போஸ்ட் ஆபரேஷன் கேர் என்ற ஒன்று உள்ளது.

vijayakanth

ஒரு திரைப்படம் ஃபுல் படம் நன்றாக வரவேண்டும் என்றால், அதற்கு போஸ்டர் இந்த இரண்டும் முக்கியம். இவற்றின் மூலம் தான் ஒரு படம் நன்றாக வரும். சூட்டிங் செய்வதால் ஒரு படம் நன்றாக வந்து விடாது. படப்பிடிப்பில் என்னென்ன தப்பு நடந்தாலும், அதை போஸ்ட் புரொடக்ஷனில் தான் சரி செய்வார்கள். அதே போல, தான் வாழ்க்கையும் அவருக்கு ஆபரேஷனுக்கு பிறகு அவரது சிகிச்சை முறையாக இருந்ததா என தெரியவில்லை. ஏனென்றால், அவ்வளவு எளிதாக தளர்ந்து விடும் உடம்பல்ல விஜயகாந்த் உடல். நெருக்கமானவர்களை அடிக்கடி சந்தித்து வந்ததாலேயே, அவர் இன்னும் பலகாலம் வாழ்ந்திருப்பார். அதை நினைக்கும் போது மனம் ஏற்க மறுக்கிறது. மனம் அடித்துக் கொள்கிறது என எஸ் ஏ சந்திரசேகர் உருக்கமுடன் பேசியுள்ளார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 560

    0

    0