நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் உடல் நலமின்றி கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சை எடுத்து வந்தார். இதனிடையே இன்று காலை (டிச.28) சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது (71)
அவரது மரணம் குறித்து அறிக்கை வெளியிட்ட மியாட் மருத்துவமனை, “நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி காலமானார்” என அறிவித்தனர்.
இதையடுத்து விஜயகாந்தின் மறைவால் திரைபிரபலங்கள், தேமுதிக கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு நேரில் சென்று தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். விஜயகாந்தின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு 4:45 க்கு தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜயகாந்த் விஜய்க்கு மிகப்பெரிய உதவி செய்துள்ளதை பேட்டி ஒன்றில் கூறிய விஜய்யின் தந்தை எஸ். ஏ. சி…. ஆரம்பத்தில் விஜய்யை வைத்து நான் இயக்கிய திரைப்படங்கள் தோல்வியை சந்தித்து எனக்கு கடன் பிரச்சனையை உண்டாக்கியது. அதன் பின்னர் விஜய்யின் இரண்டாவது படத்தில் நடிக்க கேட்டு விஜயகாந்திடம் உதவி கேட்டேன். அவரும் உடனே ஓகே சொல்ல நான் 1 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு விஜயகாந்த்தை சந்திக்க சென்றேன். ஆனால், அவர் அந்த பணத்தை வாங்கவே மறுத்துவிட்டார்.
நான் விஜயகாந்த் வீட்டு பக்கத்தில் ஒரு வீடு இருக்கவேண்டும் என நினைத்து இடம் ஒன்றை சொந்தமாக வாங்கி வைத்திருந்தேன். அதனை பிரேமலதா என்னிடம் விலைக்கு கேட்டார். ஆனால், விஜயகாந்த் என் மகனுக்கு செய்த உதவியால் நான் அவருக்கு தெரியாமல் அந்த இடத்தை ரெஜிஸ்டர் பண்ணி கொடுத்தேன். விஷயம் தெரிந்தபின் விஜயகாந்த்…”என்னை கேவலப்படுத்திட்டீங்க” என்று கத்தினார். நான் சம்பாதித்தேன், நீங்க பெருந்தன்மையோடு இருந்ததுக்கு நான் செஞ்சிட்டேன் என்று சொன்னேன் என எஸ் ஏ சி உருக்கமாக கூறினார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.