பிக்பாஸ் சீசன் 8 கடந்த ஞாயிறு கிழமை துவங்கப்பட்டு மிகவும் விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. முதல் நாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் உள்ளே போன பிறகு விஜய் சேதுபதி ஒரு பேரதிர்ச்சி கொடுத்தார்.
அதாவது அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு எலிமினேஷன் நடைபெற இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு இரண்டாவது ஆளாக சென்ற போட்டியாளரான சாச்சனா ஆண்களுக்கு எந்த பக்கம்? பெண்களுக்கு எந்த பக்கம்? என்ற முடிவெடுக்கும் இடத்தில் சாச்சனாவும் இருந்தார் .
நாங்கள் ஒரு பெரிய அறை உங்களுக்கு விட்டுக் கொடுக்கிறோம். ஆனால், அதற்கு பதில் ஒரு வாரம் மட்டும் ஆண்களை பெண்கள் யாரும் நாமினேட் செய்யக்கூடாது என கண்டிஷன் போட்டனர். அதற்கு பெண்களும் ஒப்புக் கொண்டு டீல் போட்டனர்.
ஆனால், அதற்குப் பின் வந்த ஜாக்லின் அந்த கண்டிஷனை ஏற்றுக் கொள்ளவே முடியாது என பிடிவாதமாக இருந்தார். இது அடுத்த சாச்சனா பேசும் போது நான் வெளியே போனாலும் பரவாயில்லை அந்த முடிவு எடுத்த பெண்களின் நான்கு பேரில் நானும் ஒருத்தி ஒரு வேலை பெண்களை மட்டும் நாம் ஏன் எலிமினேட் செய்யும் நிலை வந்தால்… அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு பெண் வெளியே போக வேண்டும் என்றால் அது நான் ஆக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என வெளிப்படையாக கூறினார்.
அதன் பிறகு 24 மணி நேர எலிமினேஷனுக்கு பலரும் அதை காரணம் காட்டி நாமினேட் செய்தனர். அதிகம் பேர் நாமினேட் செய்யப்பட்ட சாச்சனா எலிமினேட் செய்யப்பட்டார். சாச்சனா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவதை ஆடியன்சால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
நீங்களே வாய்ப்பு கொடுப்பீங்க நீங்களே பின்னர் வாய்ப்பைப் தட்டி பறித்து விட்டு வெளியே அனுப்புவீங்களா? ஒரு நாள் கூட அந்த புள்ளையை வீட்டில் இருக்கவிடலயே எவ்வளவு ஆசை ஆசையா புது துணிகளை வாங்கிக்கொண்டு அந்த பிள்ளை வந்திருக்கும்… இவ்வளவு ஏமாற்றி விட்டீர்களே…மக்களாகிய நாங்கள் தான் யார் வெளியே போக வேண்டும் என முடிவெடுக்க வேண்டும்.
அப்புறம் எதுக்கு நாங்க ஓட்டு போட வேண்டும்? என பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை எச்சரித்து விமர்சித்து வந்தார்கள். இந்த நிலையில் தற்போது சாச்சனா மீண்டும் பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு மூலம் என்ட்ரி கொடுத்திருக்கிறார் .மாஸ் என்ட்ரி கொடுத்த அவர் ஆரம்பத்திலேயே அதிரடியாக களமிறங்கி போட்டியாளரை எச்சரிக்கிறார்.
இதையும் படியுங்கள்: அப்போ புரியல இப்போ புரியுது… ரூ.500 கூட மனைவியிடம் கேட்டும் வாங்கும் ஜெயம் ரவி – வீடியோ!
சாச்சனாவை பார்த்ததும் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் அத்தனை பேரும் ஆடிப் போய்விட்டார்கள். என்னடா இது இப்படி ஒரு டிவிஸ்ட்டா இருக்கு? என பயத்தில் பதறிய போட்டியாளர்களிடம் சாச்சனா நான் வெளியில் போய் எல்லாத்தையும் பார்த்து விட்டு தான் வந்திருக்கிறேன் எனக்கூறி எச்சரிக்கிறார். இதனால் போட்டியாளர்கள் ஒவ்வொரு முகத்திலும் பயம் தெரிகிறது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ: