ஒருவர் குறுகிய காலத்தில் அரசியலில் உச்சம் அடைந்ததும், உச்சம் அடைந்த உடனேயே அதளபாதளத்திற்கு சென்றதும் விஜய்காந்த்தும், அவரது தேமுதிக கட்சியும்தான். திரைத்துறையில் புகழின் உச்சியில் இருந்த விஜய்காந்த், அரசியலில் களம் காண ஆயிரம் காரணம் கூறப்பட்டாலும், உண்மையில் அவரது சொத்தை சேதப்படுத்தியதுதான், அவரை அரசியலில் பிரவேசிக்க வைத்தது.
திமுக ஆட்சியில் இருக்கும் போது சாலை விரிவாக்கம் மற்றும் பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றது. இதற்காக, சென்னை கோயம்பேடில் விஜய்காந்திற்கு சொந்தமான திருமண மண்டபத்தின் ஒரு பகுதியை இடித்தே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், இதற்கு விஜய்காந்த் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதனை இடிக்காமல் கட்டுவதற்கான ஐடியாவும் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், திமுக அரசு அதனை இடித்தது. இதனால், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற விஜய்காந்த், அரசியல் கட்சிக்கு அரசியல் கட்சியால்தான் பதிலடி கொடுக்க முடியும் என்று எண்ணி, தேமுதிக என்ற கட்சியை உருவாக்கினார்.
அவர் நினைத்ததைப் போலவே, திமுக தலைவர் கருணாநிதியை மிக மூர்க்கத்தனமாக எதிர்த்ததால், எதிர்பார்த்ததை விட தேமுதிக வளர்ந்தது. கூடவே, மிகவும் குறுகிய காலத்தில் தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவர் எந்த அந்தஸ்த்தும் அவருக்கு கிடைத்தது. மேலும், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவையும் நேரடியாக எதிர்த்து தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார். ஆனால், அடுத்த சில காலத்திலேயே அவரது உடல் நலனும், தொடர்ந்து அவரது கட்சியும் சரிவை சந்தித்தது.
சினிமாவில் சாதித்தது போது அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு உதவ முயற்சி செய்தார், அதற்கான வேலைகளில் முழுமையாக ஈடுபட்டார். ஆனால் உடல்நலக் குறைவு காரணமாக அவர் அப்படியே வீட்டில் முடங்கினார்.
எழுந்து நடிக்க முடியாமல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த்தை பலர் சந்திக்க முடியவில்லை என்றும் கூறி வந்த நிலையில், தன் மகன் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் இந்த இடத்தினை பெற மிகமுக்கிய காரணமாக இருந்த விஜயகாந்தை எஸ் ஏ சந்திரசேகர் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
எஸ் ஏ சி விஜயகாந்த் அவர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படமும் கையில் முத்தம் கொடுத்த புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த விஜயகாந்த் ரசிகர்களும் தொண்டர்களும் உருக்கமாக குணமடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
சினிமா பிரபலங்கள் திருமணம் செய்யாமல் கர்ப்பமான நிகழ்வுகள் அன்றைய காலம் தொட்டே வாடிக்கையாக இருந்தன. நடிகை ஸ்ரீதேவியை குறிப்பிட்டு சொல்லலாம்.…
டிரெண்டிங் நடிகை நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தனது டிரான்ஸ்ஃபர்மேஷன் புகைப்படத்தை நேற்று வெளியிட்டிருந்த நிலையில் நேற்று முழுவதும் குஷ்பு இணையத்தில்…
ரசிகர்களுக்கான அஜித் படம் கடந்த 10 ஆம் தேதி அஜித்குமாரின் “குட் பேட் அக்லி” திரைப்படம் வெளிவந்த நிலையில் அஜித்…
தென் கைலாயம் என பக்தர்களால் போற்றப்படும் கோவை வெள்ளியங்கிரி சிவன் கோவிலுக்கு ஏழு மலையலை கடந்து சென்று சாமி தரிசனம்…
மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகியது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி எம்பியாக உள்ள…
விண்வெளி நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் விண்வெளி நாயகன் என்று அவரை இப்போது…
This website uses cookies.