ஜெனிலியாவையே மறந்துட்டீங்களேப்பா- சச்சின் பட துணை நடிகைக்கு திடீரென குவிந்த ரசிகர்கள்
Author: Prasad21 April 2025, 11:35 am
சச்சின் ரீரிலீஸ்
விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ரீரிலீஸ் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தை ஜான் மகேந்திரன் இயக்கியிருந்த நிலையில் கலைப்புலி தாணு இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

இதில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்த நிலையில் வடிவேலு, சந்தானம், ரகுவரன் உள்ளிட்ட பலரும் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். விஜய்யின் கெரியரில் ஒரு ஃபீல் குட் திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்திருந்தது. கடந்த வாரம் இத்திரைப்படம் மறுவெளியீடு கண்ட நிலையில் ரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
திடீரென கவனம் பெற்ற ராஷ்மி
“சச்சின்” திரைப்படத்தில் ஜெனிலியாவுக்கு தோழியாக ஸ்மிரிதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ராஷ்மி. இத்திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டதில் இருந்து இவர் இடம்பெற்ற காட்சிகளை மட்டும் தனியாக கோர்த்து வீடியோவாக வைரலாக ஆக்கி வருகின்றனர் இணையவாசிகள். இதனை தொடர்ந்து பலரின் பெரும் முயற்சியில் இவரது இன்ஸ்டா ஐடி கண்டுபிடிக்கப்பட்டது.
“சச்சின்” படம் மறுவெளியீடு ஆகியுள்ள நிலையில் தன்னை பலரும் கொண்டாடி வரும் செய்தி ராஷ்மியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “உங்களது பாராட்டுகளுக்கு நன்றி. இந்த வெற்றித் திரைப்படத்தில் பல சிறந்த நடிகர்களின் மத்தியில் என்னையும் பங்கேற்கச் செய்ததற்கு நன்றியுள்ளவளாக இருப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.